பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர் சந்திப்பு 123.

காசியிலிருந்து வாங்கி வந்திருந்த சில பொருள்களேயும், வெண்பட்டு ஒன்றையும் ஆசிரியப் பெருமானுக்குக் கொடுத்தார். அன்று முழுவதும் ஆசிரியருடன் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சியாக அளவளாவினர். அன்று இரவே அவர் திருவாவடுதுறைக்குத் திரும்புவதாக இருந்தது.

இரவு 9 மணிக்கு வண்டி. ஆசிரியர் தம்பிரான வழியனுப்பு வதற்கு எழும்பூர்ப் புகைவண்டி நிலையம் சென்றிருந்தார். வண்டி கிளம்புவதற்கு அரைமணி நேரமே இருக்கும். திடீரென்று ஒர் அதிகாரி வேறு சிலருடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். தம்மைக் கோர்ட்டிலிருந்து வந்திருக்கும் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு, காறுபாறு வைத்தியநாதத் தம்பிரானிடம் ஒரு சம்மனைக் கொடுத்தார். அவர் மீது கோர்ட் டிகிரி வாங்கி, இருப்பதாகச் சொன்னர். தம்பிரான் முகம் வெளிறிவிட்டது. முதலில் ஆசிரியப் பெருமானுக்கு விஷயம் ஒன்றும் விளங்கவில்லை.

அக்காலத்தில் சென்னையிலிருந்து திருவாவடுதுறை மடத் திற்கு அவ்வப்போது பழக்கூடைகளே அனுப்பி வந்த ஒரு வியா பாரிக்குப் பெருந்தொகை மடத்திலிருந்து கொடுக்க வேண்டி இருந்தது. அது கொடுக்கப்படாமல் நின்றுவிட்டது. அந்த வியாபாரி சென்னையில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து டிகிரி' வாங்கி வைத்திருந்தார். காசிக்குச் சென்றிருந்த தம் பிரான் திரும்பும் சமயம் தெரிந்து அந்த டிகிரியை நிறைவேற்றத் திட்டம் போட்டிருந்தார். தம்பிரான் காசியிலிருந்து திரும்பிச் சென்னை வந்திருப்பதை அறிந்துகொண்டு அதிகாரியுடன் எழும்பூர் ஸ்டேஷ னுக்கு அதை நிறைவேற்ற வந்து சேர்ந்தார். காசியிலும் இன்றித் திருவாவடுதுறையிலும் இன்றிச் சென்னையில் பலரும் கூடியுள்ள ரெயில்வே ஸ்டேஷனில் இந்தச் சங்கடம் நேர்ந்ததே என்ற வருத்தம் அவருக்கு உண்டாயிற்று; மலங்க மலங்க விழித்தார்.

அப்போது ஆசிரியப் பெருமான் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அந்தப் பணத்தைத் தாமே தருவதாக ஒப்புக்கொண்டு தம் பிரானைக் கவலையில்லாமல் திருவாவடுதுறைக்குச் செல்லுமாறு: ஏற்பாடு செய்தார்.

ரெயில் கிளம்பிச் சென்றபிறகு ஆசிரியப் பெருமான் அந்த அதிகாரியையும், பழவியாபாரியையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டார். ஆசிரியப் பெருமானுக்கு அந்த வாரந்தான் உத்தமதானபுரத்திலிருந்து நெல் விற்ற பணம் வந்திருந்தது. ஆதலின் பணம் கொடுப்பதில் சிரமம் ஏதும் நேரவில்லை.