பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - என் ஆசிரியப்பிரான்

தாகூரின் வருகை

1919-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31-ஆம் தேதியி லிருந்து ஆசிரியர் மாநிலக் கல்லூரியிலிருந்து விடுதலை பெற்ருர். அடுத்த நாள் ஏப்ரல்மாதம் முதல்தேதியன்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஆசிரியருக்குக்கிடைத்தது. தாகூர் சிறந்த கவிஞர் என்பதும் உலகப்புகழ் பெற்றவர் என்பதும் ஆசிரியருக்குத் தெரியும்.

தாகூர் சென்னைக்கு வந்திருப்பதைக் கேள்வியுற்று அவரைப் பார்க்க வேண்டுமென்று ஆசிரியர் விரும்பினர். அப்போது திருக்கழுக் குன்றக் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர் ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தார். தாகூரைப் போய்ப் பார்த்துவர வேண்டுமென்று ஆசிரியப் பெருமான் சொன்ன வுடன், அவர் தாமும் வருவதாகச் சொன்னர். இரண்டு பேரும் சேர்ந்து மயிலாப்பூர் லஸ்ஸில் இருந்த டி. எஸ். இராமசாமி ஐயர் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்ருர்கள். அங்கேதான் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தங்கியிருந்தார். அங்குள்ளவர்கள் ஆசிரியரை அவருக்கு அறிமுகப்படுத்தினர்கள். தாகூரின் நீண்ட தாடியும், நெடிய கோலமும் ஆசிரியரது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. மகாகவி ஆசிரியப்பெருமான் செய்துகொண்டு வரும் வேலைகளைப் பற்றி விசாரித்தார்.

இந்த நூல்களை எல்லாம் எப்படி நீங்கள் பதிப்பித் தீர்கள்?" என்று ரவீந்திரர் கேட்டார். 'தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் சென்று, அங்கேயுள்ள பல ஒலைச்சுவடிகளை எடுத்து வந்து அவற்றை ஆராய்ந்து பதிப்பித்துக்கொண்டு வருகிறேன்' என்று சொன்னர். தமிழ்மொழியின் பழைய இலக்கியங்களை எல்லாம் ஆசிரியப்பெருமான் வெளியிட்டு வருவது இந்தியாவுக்கே தனிப் பெருமை அளிப்பதாக மகாகவி எடுத்துச் சொன்னர். முடிந்தால் நான் உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்' என்றும் ரவீந்திரர் மகிழ்வோடு தெரிவித்தார்.

அன்று மாலேயே 3 மணிக்கு அந்தக் கவிஞர் தியாகராச விலாசத் திற்கு வந்து ஆசிரியரைப் பார்த்தார். அவர் வருவது தெரிந்து ஆசிரியப் பெருமான் மாலை, பழம் முதலியவற்றை வாங்கி வைத் திருந்தார். அவர் மாடி ஏறிவந்து ஆசிரியப் பெருமானுடைய புத்தகங்கள், ஏட்டுச் சுவடிகள் ஆகிய எல்லாவற்றையும் பார்த் தார். ஆசிரியர் அவற்றை எல்லாம் பிரித்துக்காட்டினர். இத்தகைய ஏட்டுச் சுவடிகளைத் தாகூர் முன்பு கண்டது இல்லை. ஆகையால்