பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

இந்த முறையில்‌ கண்ணாடிபோல்‌ மேல்‌ நாட்டாரும்‌ வியக்கும்‌ வண்ணம்‌ ஆங்கிலமே அறியாத ஒரு தமிழ்ப்‌ பண்டிதர்‌ புதிதாக இத்துறையில்‌ புகுந்து சாதித்தார்‌ என்று சொன்னால்‌ அது அதிசயமான செயல்‌ அல்லவா?

முன்னுரை முதலியவற்றை எழுதி உரைநடை எழுதும்‌. ஆற்றலைச்‌ சிறிய அளவில வெளிப்படுத்திய ஐயரவர்கள்‌, தாம்‌ பதிப்பித்த நூல்களின்‌ அங்கமாக மணிமேகலைக்‌ கதைச்‌ சுருக்கம்‌, புத்த தர்மம்‌, உதயணன்‌ கதைச்‌ சுருக்கம்‌ என்பவற்றை எழுதியளித்தாரர்கள்‌.

கும்பகோணம்‌ கல்லூரியிலிருந்து சென்னைக்‌ கல்லூரிக்குத்‌ தமிழாசிரியராக 1904 ஆம்‌ ஆண்டு வந்தார்கள்‌, அப்பால்‌ அந்தப்‌ பதவியிலிருந்து 1919. ஆம்‌ ஆண்டு ஓய்வு பெற்றார்கள்‌. கல்லூரி ஆசிரியர்‌ என்ற அலுவலிலிருந்து ஓய்வு பெற்றார்களேயன்றி மாணாக்கர்களுக்குப்‌ பாடம்‌ சொல்லும்‌ ஆசிரியத்‌ தொண்டிலிருந்தோ, நூல்களைப்‌ பதிப்பிக்கும்‌ பதிப்பாசிரியத்‌ தொண்டிலிருந்தோ, அவர்கள்‌ ஓய்வு பெறவில்லை. உண்மையில்‌ அவ்‌வேலைகள்‌ பின்னும்‌ பன்மடங்கு பெருகின.

கல்லூரியில்‌ வேலையாக இருந்தபோதே வீட்டில்‌ தனியே இவர்களிடம்‌ பலர்‌ பாடம்‌ கேட்டார்கள்‌. மகாபாரதப் பதிப்பாசிரியராகிய மகோபாத்தியாய ம. வி. இர௱மாநுஜாசாரியார்‌. திருப்பனந்தாள்‌ காசிமடத்தின்‌ அதிபராக விளங்கிய சொக்கலிங்கத்‌ தம்பிரான்‌ முதலிய பலர்‌ இவ்வகையில்‌ பாடம்‌ கேட்டவர்கள்‌. இவர்களிடம்‌ இருந்து ஆராய்ச்சி முறையைக்‌ கற்றுக்கொண்டு தாமே நூல்களை வெளியிட்டவர்‌கள்‌ சிலர்‌. பின்னத்தூர்‌ நாராயணசாமி ஐயர்‌, இ. வை. அனந்த ராமையர்‌ முதலியவரிகள்‌ இத்தகைய வரிசையில்‌ இருந்தவர்கள்‌. இவர்கள்‌ ஏடு தேடி ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்ட நூல்‌களைப்‌ படித்து அந்த முறையையும்‌ அறிந்த சில புலவர்கள்‌ பழந்தமிழ்‌ நூல்களைத்‌ தாமே வெளியிடும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டார்கள்‌.

1924 முதல்‌ 1927 வரையில்‌ ஐயரவர்கள்‌ ரஈஜா அண்ணாமலை செட்டியாரவர்கள்‌ நிறுவிய மீனாட்சி தமிழ்க்‌ கல்‌லூரியின்‌ தலைவராக இருந்தார்கள்‌.

இவர்கள்‌ ஓய்வு பெற்றபிறகு, தமிழ்‌ நூல்களைப்‌ பதிப்பிப்பதோடு தம்முடைய அனுபவங்களை எளிய இனிய உரைநடையில்‌ எழுதத்‌ தொடங்கினார்கள்‌. இந்தத்‌ துறையில்‌ ஐயறவர்கள்‌ தொண்டாற்றப்‌ புகுந்தபோது பெரியவர்களும்‌, சிறுவர்களும்‌, ஆடவரும்‌, பெண்டிரும்‌, புலவர்களும்‌ பிறரும்‌ ஒருங்கே இவர்கள்‌