பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

பழுத்த பருவத்திலும்‌ ஐயரவர்கள்‌ தமிழ்த்‌ தொண்டு வீறுகொண்டு நடைபெற்றது. குறுந்தொகையை விரிவான உரையுடன்‌ பதிப்பித்தார்கள்‌. சிவக்கொழுந்து தேசிகர்‌, குமரகுருபரர்‌ என்னும்‌ புலவர்களின்‌ பிரபந்தத்‌ திரட்டுகள்‌ குறிப்புடன்‌ வெளியாயின. தமிழன்பர்களின்‌ விருப்பப்படி, ஆனந்த விகடனில்‌ வாரந்தோறும்‌ தம்முடைய வரலாற்றை ”என்‌ சரித்திரம்‌!” என்ற தலைப்பில்‌ எழுதத்‌ தொடங்னார்கள்‌. 1940 ஆம்‌ ஆண்டு ஜனவரியில்‌ தொடங்கிய அது 122 அத்தியாயங்களோடு சுயசரித்திரமாக வரும்‌ நிலைபெற்றது.

1942 ஆம்‌ ஆண்டு உலகப்‌ பெரும்போர்‌ நிகழ்ந்தபோது ஐயரவர்கள்‌ தம்‌ குடும்பத்துடன்‌ திருக்கழுக்குன்றம்‌ சென்று தங்கினார்கள்‌. ஏப்ரல்‌ மாதம்‌ 28ஆம்‌ தேதி அந்தத்தலத்தில்‌ தமிழ்த்‌ தாயின்‌ தவப்புதல்வராகிய ஐயரவர்கள்‌, தாம்‌ பிறந்த காலத்தில்‌ கண்ட நிலையை மாற்றித்‌ தமிழ்‌ மக்களைப்‌ பழந்தமிழ்ச்‌ செல்வத்துக்கு உரிமையுடையவர்கள௱க ஆக்கி, ஆசி கூறிவிட்டு இறைவன்‌ திருவடியை அடைத்தார்கள்‌.

1948ஆம்‌ ஆண்டு மார்ச்சு மாதம்‌ ஆறாம்‌ தேதி சென்னை மாநிலக்‌ கல்லூரியில்‌ ஐயரவர்களுடைய முழு உருவச்‌ சிலை யொன்றை நிறுவினார்கள்‌. தமிழ்க்‌ கடலின்‌ விரிவை மீட்டும்‌ தமிழுலகத்துக்‌ காட்டிய ஐயரவர்களின்‌ திருவுருவம்‌ பெருங்‌ கடலை நோக்கி நிற்கும்‌ கோலத்தை இன்றும்‌ சகண்டு மகிழலாம்‌.

1955ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ 19ஆம்‌ தேதி ஐயரவர்கள்‌ பிறத்து நூறு ஆண்டுகள்‌ நிறைவடைந்தன. அதனை, அவர்கள்‌ பெயர்‌ கொண்ட நூல்‌ நிலையம்‌ மிகச்சிறப்பாகக்‌ சொண்டாடிற்று.

ஐயரவர்களுடைய குணநலங்கள்‌ பல. சிறந்த பண்பு உள்ளவர்கள்‌ இவர்கள்‌. இணையற்ற ஆசிரியர்‌. பலவகை மாணாக்கர்‌களுடைய உள்ளம்‌ அறிந்து தக்கவண்ணம்‌ பாடம்‌ சொல்வதில்‌ வல்லவர்கள்‌. புலமைப்‌ பெருங்கடல்‌; கவிஞர்‌: சிறந்த எழுத்‌தாளர்‌. முன்னும்‌ பின்னும்‌ கண்டறியாத அற்புதப்‌ பதிப்பாசிரியர்‌. சுப்பிரமணிய பாரதியார்‌ தாம்‌ பாடிய பாட்டில்‌,

”கும்பமுனி எனத்தோன்றும்‌ சாமிதாதப்‌ புலவன்‌!”
என்று ஐயரவர்களைச்‌ சிறப்பிக்கிறார்‌.

    ”பொதியமலைப்‌ பிறந்த தமிழ்‌ வாழ்வறியும்‌
       காலமெலாம்‌ புலவோர்‌ வாயில்‌
     துதியறிவாய்‌ அவர்நெஞ்சின்‌ வாழ்த்தறிவாய்‌
       இறப்பின்றித்‌ துலங்குவாயே!”

என்று அவர்‌ பரடியிருப்பதற்குமேல்‌ நாம்‌ என்ன சொல்லமுடியும்‌?

கி. வா. ஜகந்நாதன்‌