பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

என் சரித்திரம்

1. இனியதமிழ் நாடெங்கு மிங்கிலீசு பரவிதமிழ்க்
       கேற்ற மின்றிக்
   கனியகன்ற மாபோலக் கைவிடப்பெற் றிருப்பதையான்
       கண்டாற் றாது
   முனியினுருக் கொண்டவுன்றன் முன்றிலிடை முத்தமிழும்
       முழங்கு மென்றே
   தனியுறுசுப் பிரமணியத் தேசிகா நினையன்று
      தரிசித் தேனே.
[மா - மாமரம். தனி - ஒப்பற்ற பெருமை]

2. தரிசித்த வன்றுகண்டேன் றமிழ்மடந்தை தளிர்த்துலகில்
       தன்பேர் நாட்டிப்
   பரிசுபெற நினையடைந்து பலவாறாய் முயல்வதுவும்
       பாரின் மன்னர்
   தரிசிகா மணியேநீ தமிழ்மயிலைக் காப்பதுவும்
       தமிழர் யார்க்கும்
   பொருவில்பாண் டியன்சோழன் சேரனென வயங்குமுனைப்
       புனித னென்றும்.

[‘பரிசு - உலகத்தில் சிறந்த பாஷையென்று மெச்சப்படுவதாகிய பரிசு’ (பட்டாபிராம பிள்ளையின் குறிப்பு.) பொரு - ஒப்பு.]

3. அகராதி தமிழிலிணை யற்றதென் வியப்புறவொன்
       றான்றோர் யாரும்
   பகராதி ருத்தலினிப் பாரிலுள தமிழ்மடப்பண்
       ணவர்கட் கெல்லாம்
   நிகராதி ருக்குநெடும் பழியென்று முன்புகன்று
       நெடிய சீட்டுத்
   தகராதி ருக்குமொரு சிறுகுழையி லிட்டனுப்பித்
       தளர்வாய் நின்றேன்.

[மடப்பண்ணவர் - மடாதிபதிகள். பட்டாபிராம பிள்ளை அகராதி எழுத வேண்டுமென்ற வேண்டுகோளை எல்லா மடாதிபதிகளுக்கும் அனுப்பினாரென்று தெரிகின்றது. சீட்டு - கடிதம்.]

4. தளர்ந்துருகிச் சமுசயத்தா லாற்றேனாய்த் திருமுகத்தைத்
       தரிசித் தேன்காண்
   வளர்ந்தோங்கு மதியுடையாய் ஞானிகட்கோர் தாயகமே
       வள்ள லேயுன்