பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

596

என் சரித்திரம்

சிந்தாமணியைப் பற்றிய விசாரத்திலே மூழ்கியிருந்த எனக்கு, “சிந்தாமணியில் அச்சிட்ட பாரங்களுக்குத்தான் அபாயம் வந்து விட்டதோ” என்று பயந்து, “எங்கே? எங்கே?” என்று பரபரப்போடு விசாரித்தேன்.

“ஐயோ! பார்க்கு வேடிக்கைக்குப் போட்டிருந்த பெரிய கொட்டகையில் தீப் பிடித்துக் கொண்டதாம். பல பேர் சேதம். தீயை அணைக்க முடியவில்லை. குழந்தைகளும், பெண்களும், சிறுவர்களும், கிழவர்களும் தீயில் அகப்பட்டுத் தீய்ந்து போய்விட்டார்கள்” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். உடனே புரூப்களை அப்படியே வைத்து விட்டு அவருடன் அங்கே போய்ப் பார்த்தேன். என்ன பரிதாபமான காட்சி! கண்ணாற் பார்க்கச் சகிக்கவில்லை. உடல் முழுவதும் வெந்தும் உயிர் போகாமல் துடித்துக் கொண்டும் கை வெந்தும் கால் தீய்ந்தும் போன பல ஜனங்களைப் பார்த்தேன். வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்திருந்தனர். அவர்களிற் பலர் இந்த விபத்திற் சிக்கி உயிரை இழந்தனர்.

என் பெற்றோர்களின் கவலை

இந்தச் செய்தி பத்திரிகை வாயிலாக வெளியூர்களில் எங்கும் பரவவே அங்கங்கேயுள்ளவர்கள் தங்கள் தங்களைச் சேர்ந்தவர்கள் என்ன ஆயினரோ என்று திடுக்கிட்டு விசாரிக்கத் தொடங்கினர். தந்திகள் பறந்தன. கடிதங்கள் குவிந்தன. இந்த விஷயம் தெரிந்தால் என் தாய் தந்தையர்கள் மிகவும் கவலைப்படுவார்களென்று நான் எண்ணி மறுநாள் காலையிலேயே ஒரு கார்டு எழுதி என் தகப்பனாருக்கு அனுப்பினேன். அதில் ”விசேஷ மொன்றுமில்லை. ....ஊட்டு மறுத்துப்போன பசுமாட்டை ஊருக்கு அனுப்பினது நல்லதுதான். நான் பார்க் வேடிக்கை பார்க்கப் போகவில்லை. பதிப்பு வேலையைக் கவனித்துக்கொண்டு சௌக்கியமாக இருந்து வருகிறேன்” என்று எழுதினேன். என் சௌக்கியத்தைப் பற்றித் தெரிவித்ததுதான் முக்கியம்.

அதற்குள் என் பெற்றோர்கள் மிக்க கவலையில் ஆழ்ந்து ஒன்றும் தெரியாமல் திகைத்திருந்தார்கள். அவர்களுடைய துயரத்தை அறிந்த சாது சேஷையர் அவர்களைத் தேற்றினார். கும்பகோணத்துக்கு இரவில் வரும் தபால்களை விடிந்த பிறகுதான் உடைத்துப் பார்த்துப் பிரித்து எட்டுமணியளவுக்கு எல்லோருக்கும் கொடுப்பார்கள். அதுவரையில் காத்திருக்கச் சேஷையரால் முடியவில்லை. மெயில் வந்தவுடன் அவர் தபால் நிலையத்துக்குப் போய்ப் போஸ்டு மாஸ்டரிடம், “உடனே தபால் கட்டைப் பிரித்துப் பாருங்கள்” என்றார். அவர் வழக்கத்துக்கு விரோதமாகச்