பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறநானூற்றுப் பதிப்பு

741

செய்யுட் கடிதம்

அவர் இராமநாதபுரம் சென்றவுடன் எனக்கு ஒரு செய்யுட் கடிதமும் ஐந்நூறு ரூபாய்க்கு ஓர் உண்டியலும் 17-12-1894 அன்று எனக்கு அனுப்பினார். அக்கடிதத்திற் சில பகுதிகள் வருமாறு.

(கலி வெண்பா)

1. “திங்கள் புரையுந் திருவதனச் செல்வியொரு
    பங்கினமர் பெம்மான் பதமலரே - துங்க

2. முடிக்கணியாத் தாங்கி முதுபரவை வேலிப்
   படிக்கணியா யென்றும் பலநூல் - வடிக்கும்

3. உளத்தார்க் கொருநிதியா யோங்குபுகழ் மேய
   வளத்தா லுயர்குடந்தை மன்னித் - துளக்கரிய

4. நேமிநா தன்மருகி நேயமனையா ளோடுவாழ்
   சாமிநா தைய தகுநண்ப - மாமுகவை

5. மன்னியபாண்டித்துரைபல் வந்தனஞ்செய் தின்றெழுதும்
   நன்னிருப மீதாம்..............

6. காமாரி தந்தவிளங் காதலனே ராய்த்தமிழின்
   மாமாரி பெய்துலகை வாழ்விப்போய்.......





7. பயன்சிறிய தேனும் பனையளவாக் கொள்வர்
   நயன்றெரிவோ ரென்றவுண்மை நாடி - முயன்றிதுபோ

8. தைந்நூறு ரூபா வனுப்பினனஃ தேற்றருள்வாய்
   மெய்ந்நூ றுரீஇயொழுகும் வித்தகா - மைந்நூறி

9. ஆமாலை யிற்சுவையுண் டாக்கும் புறப்பொருள்வெண்
   பாமாலை யச்சிற் பதிவுசெயும் - மாமுயற்சி

10. ஊறிகந்து முற்ற லுறுவிப்பா னோங்குகவான்
    ஆறுகந்த சென்னியருள்.”

1. செல்வி - உதாதேவியார், பெம்மான் - சிவபெருமான். 2. முதுபரவை வேலிப்படிக்கு - பழைய கடலாகிய எல்லையையுடைய பூமிக்கு. வடிக்கும் - இயற்றும். 4. நேமிநாதன் மருகி - திருமாலுக்கு மருமகளாகிக் கலைமகள். நேய மனையாள் - அவனுக்கு அன்புள்ள மனையாளாகிய திருமகள். முகவை -இராமநாதபுரம். 6. காமாரி - சிவபெருமான். 7. காதலன் - முருகக்டவுள். 8. மெய்ந்-