பக்கம்:என் தந்தை தாயர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஏமாந்த இரண்டு திருடர்கள்

[அங்கம்-1]

 பலே. தாதா! - அதுக்கெல்லாம் நீங்க ஒண்னும் பயப்படா தைங்கோ - நாங்க ரெண்டுபேரு இருக்கறோம் ! இந்த செங்கல்பட்டு ஏரி ரெண்டு வருஷமா மழையில் லாதே வத்தி போன பிற்பாடு- வேலெ யில்லாதே தவிக்கிறோம். இந்த வருஷம் ஆடி மாசம் மழெ பெயும் இண்ணு ஜோஸ்யருங்க சொல்ராங்க-அந்த ஆடி மாசம் வரைக்கும் எங்களுக்கு சாப்பாடு போட்டு காப்பாத்தி வுடுங்க !-உங்ககாலண்டெ விழுந்து கெடக்கரோம்-நீங்க சொல்ர வேலேயே செய்திகினு உங்க சொத்தை யெல்லாம் காப்பாத்திகினு-இங்கே எவனாது திருடன் வந்தானுண்ணா

பக். அவன் மண்டையாவது ஒடையனும்-எங்க மண்டையாவது உடையனும் !

பலே. ஆமாம்-வேளெக்கு மாத்திரம் கொஞ்சம் கஞ்சியெ ஊத்திவுடுங்கோ எங்களுக்கு.

அ. ஆமாம்-நீங்க என்ன வேலே செய்வைங்கடாப்பா ?

இருவரும். என்னவேலே வோணுமிண்ணாலும் செய்வோம்.

அ. ஆனால் -அந்த தொழு மரத்துலே கட்டியிருக்கர மாட்டே அவத்துகினு போய்-மேய்ச்சி கொண்டுவா நீ கொல்லெ பொறத்திலே கீரே பாத்தி பொட்டிருக்கரேன்-அதுக்கு அந்த கிணத்திலேகொஞ்சம் எறங்கி தொட்டியிலே தண்ணி கொண்டாந்து பாய்ச்சிவுட்டு வா- சாப்பாடு போடரேன்.

இருவரும். அப்படியே தாதா

(இருவரும் ஒவ்வொரு பக்கமாகப் போகிருர்கள்)

அ. இந்தத் திருட்டுப் பசங்கள்-என்னெ ஏமாற்றப் பார்க்கராங்க-அதுக்குத்தான்-என் சொத்தை யெல்லாம் மச்சான் வீட்டிலே கொண்டுபோய் வைச் சூட்டு வந்துட்டேன். அங்கே யிருந்து நான் கொண்டு வந்த பொட்டியே வேணு முண்ணா - திருடிக்கினு போவட்டும் !

காட்சி முடிகிறது.