பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. நெஞ்சே எழு!

ஒரு தொழிலை தொடங்குவார். அத்தொழிலை முற்றுப் பெற முடித்தல் வேண்டும். தொடங்கிய வினைக்கண் வெற்றி வாய்க்கும் வரை. உழைக்காது, அதை இடையே கைவிட்டு, வேறு ஒன்றில் கருத்தைச் செலுத்துவாராயின், அவர்க்குப் பொருட்கேடும் புகழ்க்கேடும் உண்டாம்.

அதனால் ஒரு வினையைத் தொடங்குமுன் அவ்வினையின் ஆற்றல், அவ்வினையைத் தொடங்கும் தன் ஆற்றல், அவ்வினை வெற்றிபெற முடியாவாறு இடைநின்று தடுக்கும் பகை ஆற்றல் ஆகிய அனைத்தையும் பல முறை அளந்து நோக்கி தன்னால் அதை முடிக்க முடியும் எனத் தெளிவாக உணர்ந்த பின்னரே தொடங்குதல் வேண்டும்.

அவ்வாறில்லாமல் ஆர்வத்தில் ஒன்றைத் தொடங்கிவிட்டு அதில் ஒரு பகுதி இன்னமும் முடிய வேண்டியிருக்கும் பொழுது, இதை முடிக்கும் ஆற்றல் எமக்கு இல்லை என்று கூறி அதை அந்நிலையிலேயே கைவிட்டுப் போவது அறிவுடைமையாகாது அத்தகையார் எடுக்கும் வினை எதுவும் வெற்றி பெறாது. உயர்ந்தோர்.அவரை மதியார் அவ்வினையைத் தொடங்குமுன், அவர்க்கிருந்த புகழும் அதன்பின் இல்லாகிவிடும்; இவையெல்லாம், தொடங்குவதற்கு முன்பாகவே பலமுறை எண்ணிப் பார்க்காததன் விளைவாம்.

இவ்வுண்மையை உணர்ந்த ஓர் இளைஞன், அண்மையில் மணஞ்செய்து கொண்டிருந்தான். அவன் வாழ்க்கைத்