பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

என் பார்வையில் கலைஞர்


கடைசியில் எங்கள் இயக்குநரும் இன்னும் சில அதிகாரிகளும் மேலிடத்தின் கட்டளைப்படி முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

இந்த நிலைமையில்தான், செய்தி ஆசிரியருக்கு உறுதுணையாக ஒத்துழைத்தேன். இதனாலேயே, பல சுயநலமிகள் செய்திகளுக்குள் நுழைத்த மூக்குகளை எடுத்துக் கொண்டார்கள். நானும் பகுதி நேர செய்தியாளர்களை நியமிக்க காரணமானேன். பிரபல நடிகர் சரத்குமாரின் தந்தையும் எனது மூத்த சாகாவுமான ராமநாதன், எழுத்தாளரும் வானொலி மூத்த செய்தியாளருமான சுந்தா, இசக்கி, அருணாசலம், கூடவே தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோர் எங்கள் பிரிவில் பணியாற்றினார்கள்.

இப்படி அந்தச் செய்திப் பிரிவை ஒழுங்கு படுத்திய பிறகு, செய்தி ஆசிரியர் தனது சுயரூபத்தைக் காட்டத் துவங்கினார். என்னை டெலிபிரிண்டரில் கட்டுக்களை மட்டுமே எடுக்கச் சொன்னார். அற்பத்தனமான செய்திகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் துண்டு துக்கடா ஆசாமிகளின் செய்திகளை தேசிய செய்தியாக ஒளிபரப்பினார். இதில் அவருக்கும் எனக்கும் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில், அம்பேத்கார் பிறந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த செளடேக்கர் என்பவர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குநராக பொறுப்பேற்றார். அம்பேத்காரியத்தில் இவருக்கு அத்தனையும் அத்துபடி. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அலுவலர்களுக்காக மேலதிகாரிகளையும் பகைத்துக் கொண்டவர். என்னை அவருக்குப் பிடித்து விட்டது. என் பக்கம் உள்ள செய்தி நியாயமும் புரிந்து விட்டது. ஆகையால், எனக்கு ஆதரவாக செயல் பட்டார். இதனால், சர்வ வல்லமை மிக்க எனது செய்தி ஆசிரியரின் கோபத்திற்கு ஆளானார். அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் நிலைய இயக்குநர்களை விட செய்தி ஆசிரியர்களே செல்வாக்கு உள்ளவர்கள். அத்தனை அரசியல் வாதிகளும் இவர்கள் சொல்வதைதான் கேட்பார்கள்.

உதவி ஆசிரியரான எனக்கும் அந்த செய்தி ஆசிரியருக்கும் ஒரு கெடுபிடி போர் நடந்து கொண்டு இருந்த போது, ஒரு நாள் மத்தியானம் நிலையத்திற்குள் நுழைந்தேன். அப்போது இயக்குநரின் அறைக்கு வெளியே ஒரே கூட்டம். கணித மேதை