பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 88 லா, ச. ராமாமிருதம்

"மாமா வாங்கோ வாங்கோ, சத்தே குனிஞ்சு-" ஆனால் நான் தலையில் இடிச்சுண்டாச்சு ஐயோ லாரி, உக்காருங்கோ. என்ன சாப்பிடறேள்? காபி. ஹார்லிக்ஸ்.

B, Vq» °

அவள் பின்னாலிலிருந்து மாமி வேண்டாம் என்று. அவசரமாக சாடை காட்டினாள். ஒருவரை ஒருவர் பார்த். துக்கொண்டு மெளனமாக நின்றோம். எந்நேரமோ?

சடக்கென்று அவள் முகம், அவள் கைக்குள் புதைந்தது. விக்கி விக்கி மாரே வெடித்துவிடும்போல்...

தலை நிமிர்ந்தபோது அவள் முகம் கொழுந்து விட்டெரிந்தது.

எனக்கு அவசரமா ஐம்பது ரூபா வேணும்."

நல்லவேளையாக பர்ஸில் அவள் கேட்டது இருந்தது. ஏதோ அவசரச் செலவுக்கு அன்றுதான் புரட்டினேன். ஆனால் யார் தேவை, முன்?

வெகு நாட்களுக்குப் பின். பிற்பகல் மூன்று மணி இருக்கும். சேத்துப்பட்டு மேம் பாலம் வழி போய்க்கொண்டிருந்தேன்.

ஸ்டேஷனுக்கு இறங்கும் இடத்தில், மூன்று ரெளடிகள் ஒருத்தியைச் சூழ்ந்துகொண்டு கலாட்டர் பண்ணிக்கொண் டிருந்தார்கள். நான் ஒன்றும் சூரப்புவி இல்லை. என்னைக் கண்டதும் நழுவிவிட்டார்கள். ஒருகணம் எங்கள் கண்கள் சந்தித்தன. ஆனால் அவள் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் விர்'ரென்று படிக்கட்டு வழியிறங்கி மறைந்து போனாள்,