பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல்

அங்கு நிற்கவேணும் உத்தேசத்தில் அங்கு நிற்க வில்லை. வானமே ஒரு மாபெரும் பூவிதழ் போலும், பொல பொல புலு புலு நலு நலு மலர்ந்துகொண்டிருக்கும் அத்தனை விடி நேரத்தில், மேலே பூச்சரங்கள் தொங்கிக் கொண்டு கலர் பல்புகள் மாறி மாறிச் சிமிட்ட அந்தப் போர்டு என்னவெனும் சிறு அவாவில் கண் இமைக்கும். நேரத்துக்கு நடை தடிைப்பட்டு நின்றதெனச் சொல்லக் கூடியபடி நேரம்கூட இல்லை. ஏதோ ஒரு நொடித் தயக்கம். அதற்குள் உள்ளேயும் இருளைப் பகலாக்கும். பளிச்சு வெளிச்சம். புத்தம் புதிய நாற்காலிகள் மேசைகள் மாடிக்குப் படிக்கட்டு-யாவதும் மனத்தில் தாக்கலாகி விட்டது.

பூரீ கணேஷ் பவன்

நான் மேலே நகர்வதற்குள் உள்ளிருந்து, கூப்பிய அரங் களுடன் ஆசாமி படியிறங்கி வந்தார். கட்டை குட்டை யாகச் சற்று அகலவாட்டில், ஆனால், கட்டுமஸ்தான தேகம், சந்தன நிற மேனி.

சவரனும் வரணும் வாங்கோ உள்ளே வாங்கோ-' காதில் கடுக்கண் சிமிட்டிற்று. கழுத்தில் மைனர் செயின், இரண்டு கைகளிலும் மோதிரங்கள், வில்க் சட்டை.

பைசா நஹி என்கிற ஜாடையில் கை விரித்தேன்.