பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 லா, ச. ராமாமிருதம்

அவள் குரல் நடுங்கிற்று, அப்பா, நீங்கள் எல்லோரும் தெய்வத்தை உங்கள் தன்மையில்தான் படைத்திருக்கிறீர் கள். எனக்கும் ஏக்கம் உண்டு கண்ணிர் உண்டு. அவருக்கு அதெல்லாம் இல்லை. அவருக்கு உருவமே இல்லை. ’’

சிரித்தாள். வாங்கோ போகலாம்.'"

குனிந்த தலை நிமிராமல், அகிலா கோலத்தில் முனைந் இருந்தாள். பெரிய தாமரை அடுக்கடுக்கான இதழ்களின் இக்கலான கோடுகள் விரல்களின் நுனியிலிருந்து கோல மாவு, தீர்மானமான வளைவுகளில் சொரிந்தது.

இந்த வயதிலும் அகிலா நிறம் குன்றவில்லை. அழகா யிருந்தாள். அது கண்ணைப் பறிக்கும் ஒரு தினுசான வெளிறிச் சிவப்பு. வயதுக்கு மயிர் நரைக்கவில்லை. வங்கிக் கூந்தல், இன்று, எண்ணெய்ஸ்நானத்தில் சற்று புலபுளன. தாடைகளில், கழுத்தில் இப்பத்தான் சுருக்கங்கள் தேரிய ஆரம்பித்திருக்கின்றன. பட்டுப்புடவையிலிருந்தாள். வெள்ளிக்கிழமை அல்லவா!

கோலத்தின் வெளி ஓரங்களைச் சரிபண்ணிவிட்டு, பார்வை திரும்புகையில் பூவின் மையத்தில் இரண்டு பாதங்கள் நின்றிருக்கக் கண்டாள். கண்கள் மெதுவாய் மேனோக்க...

பாரிந்தப் பொண்ணு? எப்படிக் கோலத்துள் வந்தாள்?

என் பாதங்களுக்கு அளவெடுத்த மாதிரியே இருக்கே அமமா!'

அகிலாவின் விழிகள் வட்டங்களாயின. எனக்கு இவள் மேல் ஏன் கோவம் வரல்லே? வந்தவளின் கண்கள் அவள் மேல் குனிந்து சிரிக்கையில் அகிலாவுக்கு என்னவோ பண்ணிற்று (வயிறு திறந்துகொண்ட மாதிரி என்று சொல்ல லாமா?) கோலத்தில் சில கோடுகள் அழிந்திருந்தன.

அருகே கைகட்டி நின்ற குருக்கள்மேல் அவள் பார்வை

திரும்பியது.