பக்கம்:எப்படி உருப்படும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

11 என்கிற ஆசை நமது நடிகர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.பணம் மட்டும் ஏராளமாகப் பெறத் தவிக்கிறார்கள்.

அதிகமாகப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையால், ஏக காலத்தில் பல படங்களில் நடிக்கத் துடித்து ஒரு படத்திலாவது நல்ல பேர் எடுக்க முடியாமல் நாசமாகி, படத்தையும் நாசமாக்குகிறார்கள். பட முதலாளிகளும் திறமையோ, கதைக்கு ஏத்த

நடிகர்களையோ தேடிப் பிடிப்பதில்லை. அவர்கள் தேடி ஓடுவதெல்லாம் பெயர் பெற்றுவிட்ட பிரபல நட்சத்திரங் களைத்தான். அந்த நட்சத்திரக் குஞ்சுகள் எவ்வளவு பெருத்தொகை கேட்டாலும் கொட்டியழத் த யா ராக இருக்கிறர்கள் அதே வேளையிலே, சிறிய நடிகர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள். பெரிய நடிகர்களோ பணம் வாங்கிக்கொண்டு ஒப் பேத்துகிறார்களே தவிர, உண்மையாக உழைப்பதில்லை. ஆண் நடிகர்கள் குடித்து கண்டபடி அலைந்து குட்டிச் சுவராகிறா ர்கள். நடிகைகளும் ஆண்களோடு போட்டியிட்டு

இஷ்டம்போல் அலைந்து கெடுகிறர்கள். பணமும் பவிஷும் சேர்ந்து நடிகர் நடிகைகளை குதிர்களாகவும், பீப்பாய்களாகவும்

பிரமிட்களாகவும் பெருத்துப் போகச் செய்கின்றன.

இந்த அவலெட்சனங்கள் காதல் ஆட்டங்கள் வேறு ஆட வந்துவிடுவார்கள் திரையிலே! சில பூதங்கள் நாட்டியம் என்று கையையும் கால்களையும் அசைத்து

மூஞ்சி யைச் சுளித்து, கண்களை அறுக்கும் கோரங்களாக ஆடும் போது படம் பார்த்தது போதும். வெளியே எழுந்து போகலாம் என்றுதான் தோன்றும்.