பக்கம்:எப்படி உருப்படும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

 ஹாஸ்யத்தோடு நாட்டியம் என்கிற பெயரால் சதை வெளிச்சம்போடும் வீணத்தனம். இதில் கை தேர்ந்த துணிந்த கட்டைகள் பெருத்து வருகிறார்கள். (உடல் பருமனிலும், எண்ணிக்கையிலும்தான் )

மேக்கப் கலையின் பெயரால், அலங்கோலம் செய் தல். பெண்களின் மார்பி லே தலையணைகளையும், பஞ்சுப் பொட்டலங்களையும் வைத்துக்கட்டி மலையோ, குடமோ என மருளும்படி செய்கிற ஜாலவித்தைதான் மேக்கப் என்று கருதப்படுகிறது இன்றைய படவுலகிலே.

கதை எத்தன்மை யதாக இருப்பினும் கவலையில்லை. அவர்கள் புனிதம் என்று கருதுகிற பக்தி அளப்புகள், பக்தர் சரிதைகள், பித்தலாட்டப் புராணங்கள் எதுவே யாயினும் சரிதான். கால வேற்றுமை, இட ஒருமை, முதலியன இருக்கவேண்டுமே என்று படக்கலை நிபுணர்கள் எண்ணுவதேயில்லை. சிவராத்திரி இரவுகளில் குடிகாரர்கள் பலர் கூடி ஸ்பெஷல் நாடகம் ஆடுவார்கள், இஷ்டம்போல் எப்படி வேண்டுமானாலும் அழகு செய்து கொள்வர். குறி சொல் லும் குறத்தி வேஷக்காரன் ரிஸ்ட் வாட்சையும் ஸ்லிப்பரை யும் அணிந்து திரிவான். வள்ளி பாலிஷ் ஸ்லிப்பரும் கோல்டு ரிம் மூக்குக் கண்ணாடியும். கைக் குட்டையும் ஏந்தி அலைவாள். படாடோப எமன் கருப்புக் கண்ணாடி போட்டிருப்பான். இந்தக் குடிகார ஸ்பெஷல் நாடக பாணிதான் இன் றைய சினிமாவில் நிலவுகிறது நாடக உலகம் பெரும் பகுதி அப்படியே சினிமா பூமியில் இறக்குமதி செய்யப் பட்டிருக்கும் தோஷம்தான் முக்கிய காரணம்.