பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எமிலி ஜோலா கின்றன என்பதை உங்களில் யாரும் மறுக்கமாட்டீர் கள் என்று எண்ணுகின்றேன். - ஆகவே மிஸ்டர் டிரைபஸ் செய்த இந்த அடாத செயலே விசாரித்துத் தக்க தீர்ப்பளிக்கவேண்டு மென்று நீதிபதியவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். டிரைபஸ் வக்கீல் நண்பர் கிரெளன் பிராசிகூடர் அவர்கள் மிஸ்டர் டிரைபஸ் செய்ததாகச் சொல்லப் படும் குற்றத்தை மாத்திரம் படிப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிரஸ்தாப வழக்கில் அவர் சொல்ல வேண்டியவை, கனம் நீதிபதியவர்கள் சொல்லவேண்டி யவை, மிஸ்டர் டிரைபசுக்காக வழக்காட ஒப்புக் கொண்டு முன்வந்திருக்கிற நான் சொல்ல வேண்டி யவை, மிஸ்டர் டிரைபஸ் சொல்ல வேண்டியவை, ஜூரர்கள் சொல்லவேண்டியவை, ஏன்? இப்போது, வெளியே கூடியிருக்கும் மக்கள் சொல்ல் வேண்டியவை: பிரபல பத்திரிக்கைகள் சொல்ல வேண்டிய அப்பழுக்கில் லாக உண்மைகள் ஆகிய எல்லாவற்றையும் அவரே, சொல்லித்தீர்த்து ஒருவழக்கையே முடித்துவிட்டார். ஆனல் தீர்ப்பைமாத்திரம் சொல்லாமல் விட்டுவிட்ே டார். இந்த இடத்தில் நீதி மன்றத்தின் சம்பிரதாய மும் சட்ட நினவும் குறிக்கிட்டுவிட்டது என்று நினேக் கின்றேன். இதை நாமே பேசிக்கொண்டிருப்பதால்: பயனில்லே. மிஸ்டர் டிரைபஸை விசாரிக்கவேண்டும். மிஸ்டர் டிரைபஸ் இப்போது கிரெளன் பிராஸி கூடர் தங்கள்மேல் தொடரப்பட்டிருக்கும் வழக்கு சம்பந்தமாகப் படித்த குற்றச்சாட்டுகளைக் கேட்டீர்கள்; அதற்கெல்லாம் என்ன உங்களுடைய பதில்? டிரைபஸ் :- மேன்மைதங்கிய நீதிபதியவர்களே ! இந்த இராணுவ நீதி மன்றத்தில் வீற்றிருக்கும் நீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/74&oldid=759876" இலிருந்து மீள்விக்கப்பட்டது