பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 'உங்களுக்கு அனாவசியமாகச் சிரமம் கொடுத்து விட்டோம்!" 'இந்த உலகத்தில் எதுதான் சிரமமில்லை? எல்லாமே சிரமம்தான் ஏன், நாடகம் நின்றுவிட்டதா!' 'இல்லை; அதை எப்படிச் சொல்வது என்றுதான் எனக்கு விளங்கவில்லை! 'சும்மா சொல்லுங்கள்?" 'கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?" 'மாட்டேன்; எப்பொழுதாவது கோபித்துக் கொண்டாலும் என்னை நானே கோபித்துக் கொள்வதுதான் என் வழக்கம். நீங்கள் தைரியமாகச் சொல்லுங்கள்?" 'தம்முடன் நீங்கள் நாரதராக நடிப்பதை... 'நடிப்பதை...?? "கிட்டப்பா... ‘விரும்பவில்லை; எபபொழுதும் போல எஸ்.ஆர். பாகவதர்தான் அவருடன் நாரதராக நடிக்கவேண்டுமாம்!” என்று ஒருவாறு விஷயத்தைச் சொல்லி முடித்தார் அவர். நான் சிரித்தேன்! 'எல்லாவற்றுக்கும் சிரிப்புத்தானா?” என்றார் என்னை ஏற்கெனவே ஓரளவு அறிந்து வைத்திருந்த அவர். 'இல்லை; சிலசமயம் அழுவதும் உண்டு' என்றேன் நான். "எதற்காக?' என்றார் அவர். "கிட்டப்பாவைப் போன்றவர்களுக்காக!' என்று சொல்லிவிட்டு நான் மீண்டும் சிரித்தேன். 'வருகிறேன்' என்று அவர் போய்விட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாலைந்து வருடங்கள் எப்படியோ ஒடிவிட்டன. திரு. கிட்டப்பா என்னுடன்