பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 'அதற்கென்ன, போனால் போச்சு!" என்றார் இவர். 'சரி, வா' என்று அவரைத் தம் குழுவுடன் மலைச்சாரலுக்கு அழைத்துக் சென்றார் பாகவதர். 'இன்று என்ன காட்சி எடுக்கப்போகிறோம். தெரியுமா?’ என்றார் அவர். 'தெரியாதே' என்றார் இவர். 'உனக்கு எங்கே தெரியப்போகிறது? சொல்கிறேன் கேள் - சத்தியசீலன் எதிரிகளால் உன்னிடமிருந்து பிரிக்கப் பட்டு விடுகிறான். நீ இந்தக் காடு மலையெல்லாம் ஏறி கல்லிலும், முள்ளிலும் கால் கடுக்க நடந்து, அவனைத் 'தேடு, தேடு' என்று தேடுகிறாய். இதுதான் இன்று எடுக்கப் போகும் காட்சி, எங்கே, இந்த மலையின்மேல் ஏறி அவனைத் தேடிக்கொண்டே நட, பார்க்கலாம்?' என்று அவரைக் கொளுத்தும் வெயிலில் மலையின் மேல் ஏற்றி நடக்கவிட்டுவிட்டு, டைரக்டர் சம்பத்குமார் பக்கம் திரும்பினார் பாகவதர். ‘'என்ன, எடுக்கலாமா? என்றார் அவர் குறிப்பறிந்து. 'ம்' என்றார் இவர். 'ரிஹர்சல்' என்ற பேரால் நாலைந்து முறை தேவசேனாவை மேலே அலைய விட்ட பிறகு, டேக்' என்றார் டைரக்டர் ; 'ரெடி' என்றார் காமராமேன் ரஹிமான். தத்ரூபமாக நடிக்கவேண்டும்' என்ற ஆவல் ஒரு பக்கம்; நாலைந்து முறை ரிஹர்சல் பார்த்ததால் இயல்பாகவே ஏற்பட்டு விட்ட தளர்ச்சி இன்னொருபக்கம்; இந்த இரண்டுக்குமிடையே தள்ளாடித் தள்ளாடி, ரொம்ப ரொம்ப இயற்கையாக நடித்தார் தேவசேனா. 'கட்!" என்றார் டைரக்டர். 'ஓ.கே என்றார் காமராமேன்.