பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

201 தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். விஷயத்தை மெல்ல அவர்கள் காதில் போட்டேன். 'நான் வந்துதான் ஆகவேண்டுமா?' என்று கேட்டார்கள். 'ஆம், நீங்கள் வரா விட்டால் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க மாட்டார்கள் போலிருக்கிறது' என்றேன். 'சரி, புறப்படலாம்' என்றார்கள். வீட்டுக்கு வந்தோம்; குழந்தைகள் வந்து காரில் ஏறிக்கொண்டார்கள். கடைசியாக நானும் ஏறிக் கொண் டேன்; கார் புறப்பட்டது. பள்ளி நிர்வாகிகள் எங்களை அன்புடன் வர வேற்றார்கள். பதிவு பண்ணுபவர்கள் எவ்வளவு கால தாமதம் பண்ணமுடியுமோ அவ்வளவு காலதாமதம் பண்ணினார்கள். நாங்கள் வந்ததிலிருந்து பள்ளியும் நடை பெறவில்லை; பாடமும் நடைபெறவில்லை. ஜன்னல் வழியாகவும், கதவு வழியாகவும் பிள்ளைகளும் ஆசிரியைகளும் எங்களையே எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பதிவெல்லாம் ஒருவாறு முடிந்தது. ஆசிரியைகள் சிலர் வந்து, பிள்ளைகள் பாகவதர் அவர்களைப் பார்க்கவிரும்புகிறார்கள் என்றும், சிறிதுநேரம் அவர்களை வகுப்பறைகளுக்கு அழைத்துக் கொண்டு வரும் படியும் வேண்டினார்கள். நான் பாகவதர் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன்; 'அதற்கென்ன, போகலாமே!' என்றார்கள். நாங்கள் வகுப்பு வகுப்பாகக் கூட்டிச் செல்லப் பட்டோம். குழந்தைகளின் இன்முகம் கண்டு பாகவதர் அவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்களைப் பார்த்து, 'நன்றாகப் படியுங்கள்; ஆசீர்வாதம்' என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள். பாகவதர் அவர்களை நேரில் பார்த்த குழந்தைகளின் ஆனந்தத்துக்கு எல்லையுண்டோ ? பா .