பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

207 ஒரு வேண்டுகோள் விதி வசத்தால் பாகவதர் சிறை செல்ல நேர்ந்த பொழுது அவர் நடித்துக்கொண்டிருந்த வசந்தசேனா, ஸ்ரீவள்ளி, ராஜயோகி போன்ற பல படங்கள் முற்றுப்பெறாத காரணத்தால் வெளிவராமலே போயின. அவற்றுள் ஏவி. எம்.நிறுவனத்தாரின் ராஜயோகியில் எட்டு அற்புதமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார் என்றும், அந்தப்படம் வெளிவந்திருந்தால் ஹரிதாஸ்கூட அவ்வளவு வெற்றி கண்டிராது என்றும் திரு டி.கே.பகவதி ஒரு பொதுக் கூட்டத்தில் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். பாகவதர் இருந்த காலத்தில் அவருடைய படங்கள் பாடல்களுக்காகவே வருடக்கணக்கில் ஓடின ஆகையால் ‘ராஜயோகி' போன்ற படங்கள் முற்றுப்பெறாமற் போனாலும் அம் மாதிரிபடங்களில் அவா பாடியுள்ள பாட்டுக்களை இசைத் தட்டுக்களாகவாவது வெளியிட ஏவி.எம்.அவர்களின் குமாரர்கள் முயற்சி எடுக்கவேண்டுகிறேன். அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் '67-ல் கலைவாணர்' என்று ஒரு படத்தை, அவர் நடித்த படங் களிலிருந்து சில காட்சிகளைத் தொகுத்து வெளியிட்டு, அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைப்போல் இசைவாணருடைய அமர காவியங்களான சாரங்கதாரா, சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ்போன்ற படங்களிலிருந்து பாடல்கள் உள்ள சில காட்சிகளை முறையாகத் தொகுத்து வெளியிட்டால் என்போன்ற பாகவதர் பித்தர்கள் மனம் மகிழ்வார்கள் சென்னை -28. என்.ரங்கராஜன்.