பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆம், பின்னாளில் திரு பொன்னுவய்யங்காரை மட்டும் அவன் தன் குருநாதராகக் கொண்டிருக்கவில்லை; இந்த உலகத்திலுள்ள அத்தனை சங்கீத வித்வான்களையுமே தன் குருநாதர்களாகக் கொண்டான். யாரிடம் எந்தச் சிறப்பைக் கண்டாலும் அந்தச் சிறப்பைத் தன்னுடைய பாணியோடு இணைத்துப் பாட அவன் தயங்கியதே இல்லை. அதே சமயத்தில் யாருக்காகவும் அவன் தன்னுடைய தனித்தன்மையைக் கைவிட்டதுமில்லை. உதாரணமாக, மகான் தியாகய்யரைப் பற்றி ஒரு கதை உண்டல்லவா! பூரீ ராமபிரானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்த அவர் எப்பொழுது பார்த்தாலும் ராமர் சிலையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ராமா, ராமா!'என்று பாடிக்கொண்டே இருப்பாராம். அதை விரும்பாத அவருடைய அண்ணா ஒரு நாள் அவர் இல்லாத நேரத்தில் அந்தச் சிலையை எடுத்துக் காவேரியில் போட்டு விட்டாராம். எங்குதேடியும் அதைக் காணாத அவர், ராமா, உ னை நான் எங்கு தேடுவேனடா?' என்று உள்ளம் உருகப் பாடினாராம். நேநெந்து வெதகுதுரா? - ஹரி, நேநெந்து வெதகுதுரா?' என்னும் அந்தக் கீர்த்தனையைத் தியாகராஜன் பாடும்போது எந்த விதமான சங்கதியும் போட்டுப் பாடமாட்டான். 'ஏன்?" என்று யாராவது கேட்டால், அந்த நிலையில் மகான் தியாகய்யர் அந்தக் கீர்த்தனையைச் சங்கதியுடன் பாடியிருக்க முடியாது!’ என்பான் உண்மைதானே? இதனால் என்ன நடந்தது என்கிறீர்கள்? அந்தக் கீர்த்தனையை அவன் வாயால் பாடக்கேட்ட குருநாதர் மட்டுமல்ல; அவன் அப்பாவும் அவனுடன் சேர்ந்து அழ வேண்டியதாயிற்று. ஆம், பாவம்தான் முக்கியம் தியாகராஜனுக்கு; சங்கதி அல்ல.