பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 4

4

தேவையான, தீர்மானிக்கப்பட வேண்டிய, விவாதங்களை, அறிவாளிகள் உரிய நேரத்தில் முன்னெடுத்துச் செல்லவில்லை. என்பதற்காகக் காலம் சும்மா இருந்து விடுவதில்லை. அறிவாளிகள் சிறுபான்மையினர் என்பதும், இவர்களைத் தவிர்ந்த பாட்டாளி மக்கள் பெரும்பான்மையினர் என்பதும் அந்தப் பெரும்பான்மையினர் தம் வாழ்க்கைப் போக்கானது காலத்தை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய உண்மைகளாகும். அந்தப் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் வெற்றிகள்-தோல்விகள் ஆகியவற்றை இலக்கியப்படுத்துதல் தான் நவீனத்துவம்: என்று புரிந்து கொண்டு செயலாற்றும் அறிவாளிகளும் இல்லாமல் இல்லை! அத்தகையோர் ஆங்காங்கே சிறிய சிறிய விவாதங்களையும் சாதனைக்ளையும் செய்துள்ளனர். தமிழகத்தில் ந. பிச்சமுர்த்தியிலிருந்து கவிஞர் பாலாவரையிலும், இலங்கையில் 'மஹாகவி'யிலிருந்து நுஃமான் வரையிலும் சிறிய சிறிய விவரதங்களை முன் வைத்துள்ளனர். இங்கே சான்றுகளாகக் குறிப்பிடப்பட்டவர்களும் இவ்வெல்லைகளுக்கு உட்பட்டவர்களும் புரிந்து வந்துள்ள விவாதங்கள் சோதனைகள் அனைத்தும் படைப்பிலக்கியங்கள் சாதாரண மக்களைப் பிரதிபலிப்பது எப்படி-சென்றடைவது எப்படி என்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தன என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். எனவே தான். யாப்பின் உறுப்புக்கள் என்று ந.பிச்சமூர்த்திகுயிலின் சுருதி-முன்னு)ை அறிவித்தார். இலங்கையின் ம்ஹ்ர்கவி செய்யுள் நடையை யதார்த்த பூர்வமான படைப்புக்குத் தேவையான முறையில், பேச்சோசை மிகுந்த நடையாக மாற்றி நாடகங்கள் படைத்தார். பேச்சோசைக்கும் பாட்டோசைக்கும் இடையேயுள்ள பேதத்தை உணர்ந்தால்தான் தமிழ்க் கவிதைகளில் நவீனத்தன்மை அதிகரிக்கும் என்று இ.முருகையன் எழுதினார். எம்.ஏ.நுஃமான் எழுதியுள்ள பா நாடகங்கள்-சில கருத்துக்கள், 'ஈழத்துப்பா நாடகங்கள் ஆகிய இரண்டு கட்டுரைகளும் எழுப்பும் விவாதங்களும் தந்துள்ள விளக்கங்களும் மிகவும் முக்கியமானவை. உலக அளவிலும், தமிழிலும் காலப்போக்கில் செய்யுள் நடை நாடகப் பயன்பாட்டுக்குக் கோட்பாட்டு ரீதியாக