பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

இதற்குமுன் நான் எழுதியுள்ள 'புது மெருகு' என்ற புத்தகத்தைக் போன்றது இது. சங்கநூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வரலாறுகளும், பிற்காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினல் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்ப் புலவர்கள் தம்முடைய கவித்திறத்தினலே செய்த செயல்களே ஒவ்வொரு வரலாற்றிலும் காணலாம். அந்தச் செயல்களுக்கு உரம் தந்தது, புலவர்களிடத்தில் இருந்த தமிழ். இவ் வரலாறுகளில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழின் ஆற்றலே வெளிப்படுத்துவன. ஆகவே இதற்கு "எல்லாம் தமிழ்" என்ற பெயர் வைத்தேன்.

ஒரு நாட்டின் பெருமையைத் தெளிவதற்கு இத்தகைய வரலாறுகள் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன.

மயிலாப்பூர்

5.11.40

                                                                                          கி. வா. ஜகந்நாதன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/5&oldid=1472382" இலிருந்து மீள்விக்கப்பட்டது