இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
- முதற் பதிப்பு—1961
- இரண்டாம் பதிப்பு—1971
- விலை ரூ. 1–50
- வெளியிட்டோர்,
- சுகுமாரன் பதிப்பகம்
- காஞ்சிபுரம்.
நன்றி
“கம்பரசம்” எனும் கருத்தூற்றை ஆவலோடு படித்துச் சுவைத்து இன்புற்ற நண்பர்களுக்கு, இதோ இன்னுமொரு அறிவுக் கருவூலத்தை— “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற அரசியல் விளக்க விருந்தாக அண்ணா அவர்கள் தந்ததை நூல் வடிவாக்கித் தரும் வாய்ப்பினை அளித்து ஊக்கியமைக்கு நான் பெரிதும் கடப்பாடுடையேன்.
சமுக ஊழலைப் போக்கக் “கம்பரசம்” பெரிதும் உதவியாக அமைந்தது போலவே, “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற படைப்பும் அரசியல் விளக்கம் பெற அனைவரையும் தூண்டும் ஒரு அணையாத விளக்காக அமைத்துள்ளது.
இதனை நூல் வடிவாக்கும் உரிமையை உளமுவந்தளித்த அண்ணா அவர்களுக்கு எனது நன்றியறிதலை உரித்தாக்குகிறேன்.
—தொண்டன்-மாணிக்கம்
மணி பிரிண்டர்ஸ், சென்னை-7