பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்போம்; பிழைப்போம் என்னருமைத் தம்பி, தங்காய்! இதோ விரைந்து வருகிறேன். உங்களைப் பின் தொடர்ந்து விரைந்து வருகிறேன். உங்களோடு, முன்னேற்றப் பாதையில் விரைந்து வருகிறேன். சேர்ந்து செல்வோம். எல்லோருமாகச் சேர்ந்து செல்வோம். ஒருமுகமாகச் சேர்ந்து செல்வோம்இந்தியர்-ஆம், ஆம், நாம் அனைவரும் இந்திய்ர்; இஸ்லாமியரும் இந்தியர்; இந்துக்களும் இந்தியர்: கிருஸ்தவரும் இந்தியர்: சீக்கியரும் இந்தியர்; சமணரும் இந்தியர்: பெளத்தரும் இந்தியர்; பார் சியரும் இந்தியர்; அனைவரும் இந்தியர் என்னும் நல்லுணர்ச்சியோடு சேர்ந்து செல்வோம். பல்லவர் என்றும், பாண்டியர் என்றும் பேசும் பிள்ளைப்பருவப் பேச்சிற்குச் செவிசாய்க்காது செல் வோம். மாராட்டியர், மொகலாயர் என்ற நினைப் பைத் துறந்துவிட்டுச் செல்வோம். இமயம் முதல் குமரிவரை வாழும் அனைவரும் இந்தியர்; ஒரு நிறை இந்தியர்' என்னும் தெளிவோடு செல்வோம். கோடி, கோடிப் பேர்கள்; உடலால் மட்டுமே. உள்ளத்தாலோ? ஒருவரே! எனவே, எவரும் கள்ளத் தால் நெருங்கொனதே; இத்தகைய நிலையை உருவாக்கிச் செல்வோம். உணர்ச்சிவழி ஒருமைப் பாட்டோடு செல்வோம்; வாரீர்! கொள்கையில் தெளிவு உண்டு நமக்கு. நல்லது. அதைக் கடைப்பிடிப்பதில் உறுதியுண்டா? ஆம் என்கிறீர்களா, உடன் பிறந்தோரே! மகிழ்ச்சி. கொண்டால் கொண்டலாக வரும் பழிச் சொற் களை உதறிவிட்டுச் செல்ல, பண்படுத்திக்கொண் டீர்களா? போற்றுகிறேன். குறுக்கிடும் தடை மல்ைகளைக் கண்டு மலைப்பீர்களா? மலைக்க மாட்