பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

YO ஆராய்ந்து கண்ட உண்மை. இதுவே, மேதை களைப் பெருக்கும் முறை. மாருக உயர்கல்வியைப் பாத்திகட்டி, வேலியிட்டு, மடக்குதல் நம் நாட்டையும் மக்களையும் முடக்கிவிடும். முயற்சியின் விளைவே மதிநுட்பம் என்பது சோவியத் கல்வியின் கொள்கை மட்டுமல்ல; அன்ருட நடைமுறையில் அங்குக் காண்பதுவும் அதுவே. ஆகவே பெருங்கல்வியாளர்களின் கோபத் தைக் கண்டு அஞ்சாதே; தகுதியுண்டோ என்று அஞ்சாதே; உனக்குத் தகுதியைத் தராவிட்டால், நீயே உன் முயற்சியால் தகுதியைத் தேடிக் கொள்ள முடியும். தகுதியற்றவன்' என்கிற அவமானத்தைத் துடைக்கப் பாடுபடு. விழிப்பாக பாடுபடு. பெரிய வர்கள் வீட்டுப் பிள்ளைகளைவிட விழிப்பாகப் பாடு படு. படி மேலும் படி, மேலும் மேலும் படி. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?