பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 5 தன் பிள்ளை வளரவேண்டும். பருக்க வேண்டும்’ என்று தாயோ தந்தையோ நினைப்பது தவறன்று; பிற பிள்ளைகளெல்லாம் வளராமல், பிறந்த நிலையில் இருந்தால் மட்டுமே என் பிள்ளை யின் தொடர் வளர்ச்சிக்குத் தடையேதும் வராது. அவன் முழு வளர்ச்சிக்கு வேண்டியனவெல்லாம் குறைவறக் கிடைக்கும். ஆகவே மற்றவர்கள் பிறந்த நிலையிலேயே நிலைத்துவிடவேண்டும்’ என்று நினைப்பதோ தவறு; தீயது; கொடியது; வெறுத்து ஒதுக்க வேண்டியது. 'வாழில் மு ப் பது கோ டி முழுமையும் வாழ் வோம்’ என்பது கவிஞனின் பிதற்றல் அன்று: கற்பனையன்று கனவுமன்று. விரைந்து சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறி. காலத்திற்கு ஏற்ப இந் நெறியைத் திருத்த வேண்டாவா தம்பி! நல்லது.திருத்திக் கொள்வோம். 'வாழில் ஐம்பது கோடி முழுமையும் வாழ்வோம்’ என்று திருத்துவோமா? வாழில் இருநூறு கோடி முழுமையும் வாழ்வோம்’ என்று திருத்துவோமா? பெற்ருேர் நோக்கு, பிள்ளைகளின் வளர்ச்சி; குடிகள் நோக்கு எதுவாக வேண்டும்? நாட்டின் வளர்ச்சியாக வேண்டும். தான்தான் கல்வி;தான்தான் இலக்கியம்; தான் தான் தராசு என்பது அகந்தை. அத்தகைய அகந்தையாளரை நாளும் காண்கிருேம். அந்த அகந்தை உன்னேயும் என்னையும் பற்ருதிருப்பதாக்; தம்பி, நான்தான் நாடு. என் வளர்ச்சியும் என் மக்கள் வளர்ச்சியுமே நாட்டின் வளர்ச்சி என்கிற முனைப்பு உனக்கும் எனக்கும் ஏற்படக்கூடாது தங்காய். நாடு என்பது நாலுபேரோடு அடங்கி விடுவதன்று. நான்கு குடும்பங்களோடு குன்றிவிடு வதன்று. நூறு வீடுகளோடு நின்று விடும்.தும்ன்று.