பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 மரபை-தொன்மையின் பெயராலே-பண்பாட்டின் மயக்காலே-காத்துவர வேண்டும். அதற்கு மேல் வளரக்கூடாது என்று எண்ணுவதில்லை. ஐந்தடி வளர்ந்த மகனைக் கண்டு பூரிப்பாள், அது மட்டுமா? ஆறடி ஆண்மகன் ஆவான் என்று எதிர்பார்ப்பாள். ஆக வேண்டும் என்று விரும்புவாள்; உதவுவாள்; யார் வீட்டிற்கோ செல்லப் போகிற தன் மகள் கூடத் தன்னிலும் உயர்ந்து வளர்வதையே எந்தத் தாயும் விரும்புவாள். தன்னிலும் உயர்ந்து, சிறந்து தன் மக்கள் விளங்குவதைக் கண்டு மகிழ்வதே மக்கள் இயல்பு. உடல் வளர்ச்சியில் மட்டுமா தன்னிலும் தன் மக்கள் உயர்ந்திருப்பதை விரும்புகிருர்கள் பெற் ருேர்? 'தம்மில் தம் மக்கள் அறிவுடமை மானிலத் தில் மன்னுயிர்க் கெல்லாம் இனிது. இக்குறள் காலத் ஆால் கறைபடTஅதி: - அறிவிலும், தம்மிலும் தம்மக்கள் உயர்ந்திருப் பதையல்லவா விரும்புகின்றனர் பெற்ருேர்? அதற் காக எத்தனை தன்னலன்களைத் துறக்கின்றனர் பெற்ருேர்? நீண்ட நெடுங்காலம் தங்கள் வாயைக் கட்டி, வயிற்றைக்கட்டி பிள்ளைகளே அவையத்து முந்தியிருக்கச் செய்யும் பெற்ருேர்களைக் கண்டதில் லையா உடன் பிறந்தோரே! வளர்ச்சி நோக்கு, தியாகத்தை கேட்பது. தொடர்ந்த தியாகத்தைக்கூடக் கேட்பது. தியாகம் செய்வதற்கு அஞ்சித் தேய்வு நோக்கை ஏற்கும் பெற்ருேர் இல்லை. ஐந்து பேரை அழித்து ஒருவரை வள்ர்க்கும் பெற்ருேர்-பெற்ருேர் அல்லர்! அனை வரையும் வளர்ப்பவரே பெற்ருேர், அனைவரையும் வளர்க்கும் நோக்கே பெற்ருேர் நோக்கு. அதுவே Gт. Guп — 7