பக்கம்:எழில் உதயம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம்

அம்பிகையின் திருவருளால் அநுபூதி பெற்ற அபிராமி பட்டர் தம் மனேவாக்குக் காயங்களால் அன்னையை நினைப்பதும் வாழ்த்துவதும் பணிவதுமாகிய செயல்களை இடைவிடாது செய்து வருகிறவர். இப்போது மனத்தில் எதை எண்ணிலுைம் அது தேவியின் தொடர் புடையதாகவே அமைகிறது. அவளுடைய புகழ் எல்லை யில்ல்ாதது; கடல்போலப் பரந்தது; நம் அறிவினல் அளக்க முடியாதது. ஆனல் அந்தப் புகழ்க் கடலின் அலை. களினூடே நம் உள்ளமெனும் ஒடம் மிதக்கலாம். மெல்லிய அலை மோத, மனம் அந்த அலையின் அசைவுக்கு ஏற்ப அசைய, அதுவே தாலாட்டாக நாம் நம்மை மறந்து துாங்கலாம். இந்த நிலை வரவேண்டுமானல் மனம் தன் போக்குப்படி போகக்கூடாது. அது அம்மையின் புகழலை யிலே அசையவேண்டும்; அவள் புகழ்க்கடலில் உலவ வேண்டும்.

இத்தகைய அநுபவம் இவ்வாசிரியருக்குக் கிடைத்தது. ஆனல் அது எளிதில் கிடைத்ததா? எப்போதும் அன்னையின் பிரபாவத்தில் உள்ளம் மிதப்பது என்பது சில நாட்களில் வருவது அன்று. எத்தனையோ காலம் முயன்று முயன்று அது வரவேண்டும். பல படிகள் கடந்து அந்த உயர் நிலையை அடையவேண்டும்.

இந்த நிலையை அடைந்தவர், இதற்கு முன் என்ன என்ன படிகளைத் தாண்டி வரவேண்டியிருந்தது என்பதை நினைப்பூட்டிக்கொள்கிருர்,

எழில்-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/121&oldid=546278" இலிருந்து மீள்விக்கப்பட்டது