பக்கம்:எழில் உதயம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 எழில் உதயம்

உணர்ந்து ஒதும் பயிற்சி அமையும் என்றும், அதன் பின்பு அவள் புகழ்ையே எண்ணி அநுபவிக்கும் நிலை உண்டாகும் என்றும் இந்தப் பாடலால் தெரிந்து கொள் கிருேம். - i

கண்ணியது உன் புகழ் கற்பதுஉன் நாமம்;

கசிந்துபத்தி

பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில்:

பகல்இரவா

கண்ணியது உன்னை நயத்தோர் அவையத்து:

நான்முன்செய்த

புண்ணியம் ஏது? என் அம் மே,புவி ஏழையும் பூத்தவளே!

(என் தாயே, ஏழுலகத்தையும் படைத்த பெரு மாட்டியே, அடியேன் எப்போதும் தியானம் செய்தது உன்னுடைய பெரும் புகழை, பலகாலும் பயின்று உணர் வுடன் ஒதுவது உன் திருநாமத்தை உள்ளம் உருகிப் பக்தி பண்ணியது உன் இரண்டு திருவடித் தாமரைகளில், பகலும் இரவுமாகச் சென்று சேர்ந்தது, உன்னை விரும்பிய அன்பர் களின் கூட்டத்தை; இவ்வளவுக்கும் காரணமாக அடியேன் முற்பிறவியிற் செய்த புண்ணியச் செயல் யாது?

கண்ணியது-நினைத்தது. கசிந்து-உருகி, அவையம் - சபை, சங்கம்; இங்கே கூட்டம். பூத்தவள்-தோற்றுவித் தவள்.) - .."

இது அபிராமி அந்தாதியில் உள்ள பன்னிரண்டாம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/132&oldid=546288" இலிருந்து மீள்விக்கப்பட்டது