பக்கம்:எழில் உதயம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாபெருந் தெய்வம் 127

உலகத்தையும் சங்காரம் செய்கிருள். ருத்ரருபா என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று.

பின் கரந்தவளே!

கரந்தவள் என்பது மறைத்தவள் என்னும் பொருள் உடையது. ஒரேயடியாக இனித் தோன்முதவாறு எல்லா வற்றையும் அவள் அழித்துவிடுவதில்லை. பிரபஞ்சங்களே ஒவ்வொன்ருகப் புறப்பட விட்டுக் காப்பாற்றிப் பின்பு அவற்றைத் தனக்குள் அடக்கிக் கொள்கிருள். பெண் கோழி தன் சிறகுக்குள் குஞ்சுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு மறைப்பது போல் இருக்கிறது இந்தச் செயல்.

சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம் என்னும் தொழில்கள் ஒரு முறைமட்டும் நிகழ்கின்றன அல்ல. அவை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சங்காரத்தைத் தொடர்ந்து மீண்டும் படைப்பு நிகழ்கிறது. ஆதலின் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி மறைப்பதையே சங்காரம் என்றும், மீட்டும் தோற்றச் செய்வதையே படைப்பு என்றும் கூறுவர். ஒவ்வொரு தத்துவமாக, தாமரை மலர்களில் இதழ்கள் விரிவது போல விரிவதனல் அகில புவனங்களும் தோன்றி இயங்கத் தொடங்குகின்றன, மீட்டும் மாலை நேரத்தில் தாமரை தன் இதழ்களைக் குவித்துக் கொண்டு கூம்புவது போலத் தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்று அடங்கி இறுதியில் பரதேவதையினிடம் மறைந்து ஒடுங்குகின்றன. அப்படி மறைக்கும் செயலைச் செய்பவளாதலின், கரந்தவளே என்ருர்.

பூத்தவளே புவனம் பதின்ைகையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே!

புவனம் பதின்ைகையும் என்பதை ஒவ்வொரு செய லோடும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/135&oldid=546291" இலிருந்து மீள்விக்கப்பட்டது