பக்கம்:எழில் உதயம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னேயின் தண்ணளி 135

உண்டு. இது பெரிய அதிகாரிகள் அந்தரங்கமாக அம்மை

யைச் சந்தித்து முறையிட்டுக்கொள்ளும் இடம். அம்பிகை

இங்கே சில சமயங்களில், வந்து தங்கி தன்னைத் தேடி

வந்திருக்கும் பெரியவர்களைப் பார்த்து அருள் செய்வா

ளாம். இப்போதுகூட யாரோ இருவர் அம்பிகையைத் தனியே பார்த்து அவளுடைய கட்டளையையும் அருளையும்

பெறக் காத்திருக்கிருர்களாம், உள்ளே போய் அவர்கள்

இன்னரென்று பார்த்து வரலாமா?

அட, இவர் இங்கே எங்கே வந்தார்? நான்கு திசை யிலும் முகங்களும் எட்டுத் திசையிலும் விட்டெரிக்கும் கண்களுமுடைய படைப்புக் கடவுள் அல்லவா இவர்? இவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிருர், கண்ணை மூடிக் கொண்டு யோகம் செய்பவரைப்போல் அமர்ந்திருக்கிரு.ர். ஆம், இவர் அன்னையைத் தம் உள்ளத்திலே தியானம் செய்கிருர். நேரே வந்து விண்ணப்பித்துக் கொள்ளும் தேவர்களேவிட இவர் உயர்ந்தவர்; தியானத்தினல் அம்பி கையை எளிதில் காணலாம் என்ற தந்திரம் தெரிந்தவர்.

சிந்திப்பவர் கற்றிசைமுகர்.

அதோ இன்னும் உள்ளே யாரோ அமர்ந்திருக்கிருரே ! நாராயண மூர்த்தியைப் போல அல்லவா இருக்கிருர்? சரி, சரி, சந்தேகமே இல்லை, சாட்சாத் வைகுண்ட வாசர்தாம். நீலமேக சியாமள மேனியும் சங்கு சக்கரமும் இவரை நன்முக அடையாளம் காட்டுகின்றனவே! இவர்க்ட யோகத்தில் இருக்கிருர், இவர் இருப்பதைப் பார்த்துத் தான் வழி தெரிந்து நான்முகப்பிரானும் உட்கார்ந்து விட்டார் போலும்!

திருமால் ஏன் இப்படி இருக்கிருர்? உலகத்தையெல் லாம் பாதுகாக்கும் பெரிய பொறுப்பு இவரிடம் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/143&oldid=546299" இலிருந்து மீள்விக்கப்பட்டது