பக்கம்:எழில் உதயம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம் 175

களிப்பு உண்மையான பக்தர்களுக்கு அபிராமியைத் தரிசிக்கும்போது உண்டாகிறது. அவர்களுடைய கண்கள் இன்புறுகின்றன. இந்த அளவோடு அவர்கள் நிற்ப தில்லை. அம்பிகையை அப்படியே உள்ளே விழுங்கு கிருர்கள்; கண்ணுல்தான். கருத்திலே அம்பிகையின் திருமேனி சோதி விட்டுச் சுடர்கிறது. புறத்தே கண்ட காட்சிக்கும் அதற்கும் எத்தனை வேறுபாடு! ஒர் அழகிய பெண்ணின் போட்டோவை முதலில் காண்கிருேம், பிறகு அவளையே பார்க்கிருேம், படத்தில் ஒரளவு கவர்ச்சி இருந்தாலும் நேரில் பார்க்கும்போது உண் டாகும் இன்பத்துக்கு ஈடாகுமா? அவ்வாறே புறத்தே பார்த்துப்பெற்ற இன் பத்திலும் அகத்தே பார்த்த இன்பம் கங்கு கரையின்றிப் பெருகுகிறது. வெளியே நின்ற அம்பிகையின் திருமேனியைப் பார்த்து விழியிலே களி நின்றது; இன்பம் தோன்றி நிலையாக இருந்தது. பின்பு விழியிலே கண்டதை நெஞ்சிலே நிறுத்திப் பார்க்கும் போது அந்த ஆனந்த வெள்ளத்துக்குக் கரையே காண முடியவில்லேயாம். விழி திருமேனியைப் பார்த்துக் களி கொண்டதோடு நின்றிருந்தால் இந்த அநுபவம் உண்டாகாது. நெஞ்சும் அந்தத் திருமேனியைக் கண்டத ளுல்தான் கரைகாணுக் களிவெள்ளம் பொங்கியது.

இதன் பயன் என்ன? அந்த நெஞ்சம் ஒரே இன்ப வெள்ளமாக வேறு ஒன்றுக்கும் இடம் கொடாமல் இருக் கிறது. இப்போது கலக்கம் இல்லை; அணுவளவும் அழுக் கில்லை. வெறும் கண்ணுடியைப் பார்த்தால் அதன் உருவம் தெரியும். கீழே ஒர் அழகிய படத்தை வைத்து மேலே அந்தக் கண்ணுடியை வைத்தால் கண்ணுடியின் * உருவமே நம் கண்ணில் புலப்படுகிறதில்லை; படந்தான் தெரிகிறது. கண்ணுடியில் அழுக்கு இருந்தால் அந்தப் படத்தோடு அதுவும் தெரியும். படம் தெளிவாகத் தெரி கிறதென்ருல் கண்ணுடியில் அழுக்கே இல்லை, தெளிவாக இருக்கிறது என்று கொள்ள வேண்டும். அதுபோல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/183&oldid=546339" இலிருந்து மீள்விக்கப்பட்டது