உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுச்சி முரசு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வந்து திண்டு தலையணைப்போட்டுக்கொண்டு தூங்குகிறான். திராவிடநாட்டு மக்கள் மலேயா, சிங்கப்பூர், சிலோனுக்குச் சென்று தேயிலைத் தோட்டத்தில் உழைத்து வயிறு வளர்த்து வருகிறார்கள். அவர்களைச் சொந்த நாட்டில் வாழச்செய்ய முடியாதா? வடநாட்டு பனியாக்களை இங்கி ருந்து விரட்டினால் நம் தோழர்களை நமது நாட்டிற்கு வர வழைக்கமுடியும் நாம் திராவிடநாட்டைப் பிரித்தால்தான் இவற்றையெல்லாம் செய்ய இயலும். திராவிடர்நாடு திரா விடர்க்கானால் நமக்கேற்ற அரசியலை நாம் நாட்டமுடியும். வாணிபத்தில் வடநாட்டு ஏகாதிபத்தியம், அரசியலில் ஆங் கில ஏகாதிபத்யம் ஆத்மார்த்த துறையில் ஆரிய ஏகாதிபத் தியம் இம்மூன்றையும் ஒழிக்கவே திராவிட நாடு திராவிட ருக்கே என்கிறோம். பரங்கி ஆட்சி, பனியா ஆட்சி, பார்ப் பன ஆட்சி ஆகிய மூன்று ஆட்சிகளும் அழிக்கப்படவேண் டும் என்பதே திராவிட கழகத்தின் திண்ணிய கொள்கை யாகும். நாடு பிரிந்தால் நம் நாட்டில் வாழவகை யில்லையா? ஆண்மையில் சுத்தானந்த பாரதியார் கூட நம் நாட்டு வளம் பற்றி நன்கு கூறியிருக்கிறார். நமது போற்றுதலுக்குரிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் "வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே! என்ற திராவிடநாட்டுப் பண் மூலம் நமது நாட்டின் செழுமையை அழகுற தெளிவு படுத்தியுள்ளார் ஏனைய நாடுகளைவிட நம்நாடு பல்வளமும் பல்கியநாடு. இந்நாட்டில் என்ன வளம் இல்லை? வடிநாட் டிலாவது பாலைவனம் உண்டு இங்கு அதுவும் கிடையாது. முத்துக்குளிக்கும் குமரித்துறையைப் பெற்றது நம்நாடு. கனிகள் வெட்டி எடுக்கும் சுரங்கங்களும், வற்றாத ஆறு களும், வளமுள்ள சோலைகளும், விளைநிலங்களும், வேய் நிறைமலைகளும் நிறைந்தது நம்நாடு. ஜப்பானின் பெரும் பகுதி எரிமலைகளால் நிரம்பியது. அந்நாடு ஆளுந்திறமை பெற்றுத் தனித்து வாழும்போது வாழும்போது எல்லா வசதிகளும் பெற்ற நாம் திராவிடடத் தனியாசு ஏன் அமைக்கமுடியாது! நம் தேசீயத் தோழர்கள் நாட்டைப்பிரிக்கக் கூடாது என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/26&oldid=1732328" இலிருந்து மீள்விக்கப்பட்டது