பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 செய்திகளை எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் கொடுக்க வேண்டும் என்று அதன் அதிபர் கருதினர். அவர் திறமை யான பத்திரிகையாளர் (ஜர்னலிஸ்ட்) என்பதை நிரூபித்தார். செய்திகளை எந்த விதமாக எழுத வேண்டும் என்று அவர் தமது பத்திரிகையில் பணிபுரிய வந்த உதவியாளர் களுக்கு வகுப்பு நடத்தி, கற்றுத்தந்தார். உதவியாளர்கள் பெயர் பெற்ற எழுத்தாளர்கள் அல்லர். பள்ளி இறுதி வகுப்பை முடித்து விட்டு வந்த இளைஞர்கேைய அவச் தேர்ந்தெடுத்துப் பழக்கினர். தினத்தந்தி பாஷை என்றே தனியாக ஒன்று உருவாக் கப்பட்டது. சதக் சதக் என்று கத்தியால் குத்தின்ை; "இடிராஜா', இரவு ராணி , ரோட் லைட் ரோமியோ, என்பன போன்றெல்லாம் பதங்கள் செய்தித் தலைப்புகளிலும், செய்திகளிலும் தாராளமாக அடிபடலாயின. அரசியல், சமூக, சர்வதேசச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காதல் தோல்வி, விபசாரம் போன்ற விஷயங்களே எடுப்பாகவும் முக்கியமாகவும் பிரசுரிக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது. கார்டுன்கள், கேலி பேசுகிற (நகைச்சுவையான புதுமொழிகள் உதிர்க்கிற) காமிக் சித்திரங்கள், மர்மத் தொடர்கதைப் ப. வரிசை போன்ற, வாசகர்களைக் கவரக்கூடிய அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றன. சினிமா விஷயங்கள் நிறையவே தரப்பட்டன. . தினத்தந்தி' சர்வ ஜனரஞ்சகமான பத்திரிகையாக வளர்ந்தது. பல மாவட்டங்களில் பதிப்பித்து வெளியிடும் முறையும், அலுவலகங்களும் ஏற்பட்டன. அதே போக்கில்