பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 i. பற்றி யோசிப்பார்கள். விற்பனை கணிசமாக இருக்கிற வரை, அவர்கள் இதே வழிமுறைகளைத் தான் கையாள். 份!静^舵”ö6鞘”。 அவ்வப்போது, அங்கங்கே, எதிர்ப்பு இயக்கங்கள் வாசகர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டது உண்டு. ஒவ்வொரு வாரத்திய இதழையும் பார்த்து, மோசமானஆபாசமான- விஷயங்களையும் படங்களையும் சுட்டிக்காட்டி, கண்டித்து அந்த அந்தப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள் ஒரு குழுவினர். . இலக்கியச் சிந்தனை கூட்டங்களில் ஒவ்வொரு மாதமும், வணிக நோக்குப் பத்திரிகைகளின் மோசமான போக்குகளை விமர்சகர்கள் காரசாரமாகவும், குத்தல்கள் கிண்டல்களோடும், எடுத்துச் சொல்கிருர்கள், - இந்த விதமான செயல்கள் பத்திரிகைகளின் போக்கை மாற்றி விடுவதில்லை. அவை கூட தங்கள் பத்திரிகைக்கு விளம்பரம் தான் என்று கருதும் மனநிலை தொழில் அதிபர்களுக்கு இருக்கிறது. ஒரு சமயம் சுட்டி’ என்ற சிறு பத்திரிகை, மசாலாப் பத்திரிகைகள் போக்கைக் கண்டித்து, விமர்சன ரீதியில் கட்டுரைகள் வெளியிட்டது. குமுதம் பற்றி வெளிவந்த கடுமையான விமர்சனத்தை குமுதம் பெருமையாக எடுத்து ஒரு இதழில் பிரசுரித்து மகிழ்ந்தது. விற்பனை குறைந்தால் தான் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மனசில் படும். அதுவரை அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.