பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

பெற்று விட்ட அவரைப் போல் எழுதுகிறேன் — இவர் பாதிப்பினால் எழுதுகிறேன்; இவருடைய எழுத்து மாதிரியே எனது எழுத்தும் இருக்கிறது என்று சொல்லிக் கொள்வது பெருமைக்குரிய விஷயம் அல்ல.

குறிப்பீட்ட ஒரு படைப்பாளியின் தாக்கத்தினுல் எழுத முற்படுகிற போது, அவருடைய எழுத்தின் பாதிப்புகள் - சாயல்கள் - புதிதாக எழுதுகிறவரின் எழுத்துக்களில் இடம் பெறத் தான் செய்யும். ஆனால் அந்த தாக்கத்தை மீறி, முன்னேறி, சுய வளர்ச்சி காட்டுவதில் தான் புதிய படைப்பாளியின் வெற்றி பிரகாசிக்க முடியும். சுய விமர்சனம் செய்து கொள்வதன் மூலம், எவரும் தனது எழுத்துக்களில் உள்ள குறைபாடுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள இயலும்.

ஒவ்வொரு எழுத்தாளரும் எழுத்தில் தனித் தன்மை பெற முயல வேண்டும்.

எழுத வேண்டும் என்கிற உணர்வு ஏன் ஏற்படுகிறது ? தன்னை, தனது அனுபவங்களே அனுபவங்கள் தன் உள்ளத்தில் எழுப்பிய பதிவுகளை வெளிப்படுத்த வேண்டும் — மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் — என்ற உந்துதலினால்.

தனது உள்ளத்தின் உணர்வுகளை, கிளர்ச்சிகளை, எழுச்சிகளை சலனங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு மனிதருக்கு இயல்பாகவே உள்ளது.

சிறு குழந்தைகளின் செயல்களைக் கவனித்தால் கூட இது புலனாகும். பெரியவர்கள் - ஆண்கள், பெண்கள் - பேச்சினால் இத்துடிப்பைத் தணித்துக் கொள்கிறார்கள். எழுதும் ஆற்றல் பெற்றிருப்பவர்கள் எழுத்தின் மூலம் இதை