பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


கெடுபிடி செய்து பொடி பல செய்யும் பல்லை! - உள்ளக்
கிளர்ச்சி வடிக்க இலக்கண மேபெருந் தொல்லை!-
பாட்டின் அடிபடு மெதுகை அடிபடு மோனையிற் சாடக் -கூத்
தாடும் கவிதைத்தாயே! நீயோர் தொல்லை!
தொல்லை! தொல்லை! - உன்னைத்
தொடுவதும் இனிமேல்தானும் இல்லை! இல்லை!
விக்கும் பொருளைக் கக்கத் திணறி நையோம் - அந்த
வேதனைதீரச் சோதனைக் கவியே செய்வோம் ! - தமிழ்
பொக்கும் பொடியும் மக்கும் மடிந்தே போகும் - என்ற
போதும் கவிதைத்தாயே! நீயோர் பூதம்!
பூதம் ! பூதம் ! - எங்கள்
புதுமைக் கவியே இனிமேல் எங்கள் வேதம் வேதம் !


என்பது திருச்சிற்றம்பலக் கவிராயரின் 'சோதனைக் கவிதை’. கு.ப.ரா நினைவு ஏடாக வெளிவந்த எழுத்து- புதுக்கவிதை இயக்கத்திற்கான கொடியேற்று இதழாகவே காட்சியளிக்கிறது. இந்த இதழில் விடுபட்டுப்போன ஒரு வழக்கமான அம்சம் வாசகர் கருத்தரங்கு - கடிதங்கள் பகுதி இல்லாமற் போனதுதான்!

158