பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

போன்ற உருவம்படைத்த சிறு கதைகள் செக்காவினுடையவை. மழமழ வென்று பூசி மெழுகிய களிமண் உருண்டைகள் மோபாஸானின் சிறுகதைகள். ஓ ஹென்ரியின் சிறுகதைகள் அழுத்தி விட்டு விட்டால் மேலெழும்பி நம் கையையே பின்பற்றும் விசை Spring போன்றவை. குதித்துக் கொம்மாளமிட்டுக் கொண்டு நம்மை முட்டித் தாக்க வரும் காளைகள் போன்ற சிறு கதைகள் ஹெமிங்வேயினுடையவை. ராக்ஷஸ எட்டுக்கால் பூச்சி போல நின்று நிலைத்து நம்மை மயக்கி அருவருப்பையும் கவர்ச்சியையும் ஒருங்கே தந்து வலை வீசும் உருவம் படைத்தவை வில்லியம் பாக்னரின் சிறு கதைகள். நகாசு வேலையை அதி அற்புதமாகச் செய்த பொன் அணிகள் அநடோல் பிரான்சின் கதைகள். கார்க்கியின் கதைகளோ கனமான காட்டு மரத்தால் செய்யப்பட்ட உபயோகமான சாமான்கள்...