பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாழை பூத்தது
பெ.கோ.சுந்தரராஜன்

'நான் வரட்டுமா கல்யாணி? மாமா காத்திண்டு இருப்பார். பாட்டி தூங்கியிருப்பா, பசங்கள் ரகளை பண்ணுவா, ..... சரி போட்டது போட்டபடி இருக்கட்டும். நீ தூங்கு.'

‘சரி மாமி....உங்களுக்கு ரொம்ப சிரமம்’ என்று கல்யாணி வந்தனம் தெரிவித்தாள். அப்பொழுது தான் சாப்பிட்ட இலையை எறிந்துவிட்டுக் கை அலம்பி விட்டு வந்தாள்.

போடிபோ, பைத்தியம். கதவைத்தாளிட்டுக்கோ... அடுத்த வீட்டு மாமி பாலம்மாள் விடைபெற்றுச் சென்றாள்.

கல்யாணி அந்த அம்மாள் போவதையே பார்த்துகொண்டு வாசலில் நின்றாள். பெற்ற தாயார் மாதிரி இப்படி யார் வந்து உதவுவார்கள்? கல்யாணியின் தனிமையில் அந்த அம்மாளின் துணை எவ்வளவோ ஆறுதல் அளித்தது. இரவு அதிக நேரம் ஆகி விடவில்லை. மணி எட்டு தான் இருக்கும். இருந்தாலும் ஊர் ஒசை அடங்கிக் கொண்டிருந்தது. தெருக்கோடியில் இருந்த பெட்டிக்கடை வாசலில் ஓரிரண்டு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சில வீடுகளுக்கப் பால் ஒரு அனாதை, அம்மாவையும் தாயையும் மகராசியாக்கி தருமம் செய்யத் தூண்டிக் கொண்டிருந்தாள். சற்று துரத்தில் அவளுக்குப் போட்டியாக ஒரு நாய் குலைத்துக் கொண்டிருந்தது. எங்கோ ஒரு வீட்டு வாசலில் இலை விழும் சத்தம் கேட்டு நாய் ஓடிவிட்டது. பிச்சைகாரி தோல்வியைப் பொருட்படுத்தாமல் வோட்டு கேட்கும் அபேஷகரைப் போல் அடுத்த வீட்டுக்கு நகர்ந்து மீண்டும் மக்களுக்கு தரும உணர்ச்சியை வலியுறுத்தினாள். கதவு தாளிடப்போகும் சமயத்தில் கல்யாணிக்கு நினைவுவந்தது. வேலைக்காரி கூட மறுநாள் வரமாட்டாள். மிஞ்சிய சாதம் வீணாகி விடுமே என்று உள்ளே விரைந்தாள்.

சோற்றுப் பாத்திரத்துடன் நாலு வீடு தள்ளி நிற்கும் பிச்சைக்காரிக்காக கல்யாணி வாசலில் பொறுமையுடன் காத்து நின்றாள். ஏ 'பிச்சைக்காரி இங்கே வா’ என்று கூப்பிட அவளுக்குக்

58