பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் } - { 17) இந்தத் தலைமுறையில் அதே கோவிலின் ஒரு பகுதியில் தெய்வங்களாக வைத்து வணங்கப்படுகிறார்களே! நான் முன்பு நடந்து வந்த வழியில் இப்போது நடந்து வந்துகொண்டிருக்கும் இளம்நண்பர்களுக்கு இந்த இரகசியத்தைச்சொல்லிவைக்கிறேன். வாய்(ப்பு) உள்ள பிள்ளைகளாயிருந்தால் பிழைக்கிறார்கள். - என்று இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் நா.பா. நா.பா. சிறுகதைகள், தொடர்கதைகள் - கவிதைகள் - இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்று ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார். அவர் எதுபற்றி எழுதினாலும் அதை பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படித்து மகிழ்ந் தார்கள். அவர் மக்கள் எழுத்தாளராக விளங்கினார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொன்னாலே போதுமானது. * - அவரது குறிஞ்சி மலர் - கல்கியில் தொடராக வெளிவந்த போது -அந்தக் கதையின் நாயகன் அரவிந்தன் - நாயகி பூரணி ஆகியோரது பெயரையே தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வாசகப்பெருமக்கள் சூட்டி மகிழ்ந்தார்கள் குறிஞ்சிமலர்-மூலம் நா.பா. படைத்த அந்தப் பாத்திரங்களும் வாழ்கிறார்கள்; குறிஞ்சி மலர் படித்து மகிழ்ந்த வாசகர்களின் குடும்பங்களிலும் அரவிந்தன் -பூரணிகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நா.பா.வின் இறுதிக்காலம் வரையில் அவரது நெருங்கிய நண்பனாக இருந்திருக்கிறேன். மலேயா சென்று சொற்பொழிவு களாற்ற அவர் பயணப்பட்டபோது நாடினார். 'மூவாயிரம் ரூபாய் கைமாற்றாக யாரிடமாவது வாங்கிக் கொடுங்கள்' என்று கேட்டார். அப்போதுநான் அலை ஒசையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன், அலை ஒசை நாளிதழின் நிர்வாக இயக்குநர் முன்னாள் மேயர் வேலூர் நாராயணனை அணுகி அவரிடம், - - "நா.பா.வுக்கு 3ஆயிரம் கொடுங்கள்-அவர்திரும்பிவந்ததும் அவரிடம் ஒரு தொடர்கதை வாங்கி - ஈடு செய்து கொள்ளலாம்" என்றேன். நாராயணன் தாராள மனம் படைத்தவர். மூவாயிரம் ரூபாய் கொடுத்தார். நா.பா.விடம் அதைக் கொடுத்து-விவரத்தைச் சொன்னபோது, 'திரும்பி வந்ததும் முதல் தொடர் கதை. உங்களுக்குத்தான்' என்று கூறியவர் என்ன நினைத்தாரோ 'இப்போதே தலைப்பைத் தந்து விடுகிறேன்; எழுதிக் கொள்ளுங்கள்' என்றார்.