பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

எழு பெரு வள்ளல்கள்

தன் வில்லை வளைத்து ஒரு யானையின்மேல் அம்பை எய்தான். மற்றவர்கள் எய்திருந்தால் அந்த யானையைப் புண்படுத்தி அதன் உடலிலே தங்கியிருக்கும். ஆனால் இந்த வீரன் எய்த அம்போ அந்த யானையைக் கீழே வீழ்த்தியது. அந்த யானைக்குப் பின்னாலே அதன்மேல் பாய்வதற்காக ஒரு புலி ஆவென்று வாயைத் திறந்துகொண்டு நின்றது. அம்பு புலியின் வாய்க்குள்ளே சென்று அதையும் மாய்த்து அதன் உடம்பையும் துளைத்துப் புறப்பட்டது. அங்கே நின்றிருந்த ஒரு கலைமான ஊடுருவி அதை உருட்டியது. பிறகு உரல் போன்ற தலையையுடைய காட்டுப் பன்றி ஒன்றின் உயிரை வாங்கியது. அதற்கு அப்பால் இருந்த புற்றுக்குள்ளே நுழைந்து அங்கிருந்த உடும்பைத் தொலைத்தது. இந்த வல்வில் வேட்டையைப் பார்த்துப் பாணனும் பிறரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

"இத்தனை விலங்குகளையும் ஒரேயடியாகக் கொல்லும் இவ்வீரன் யாரோ தெரியவில்லையே! இவன் கூலிக்கு வேட்டை ஆடுபவனாகத் தோன்ற வில்லை. உருவத் தோற்றத்தைப் பார்த்தால் நல்ல செல்வனென்றே தோன்றுகிறது. மார்பிலே முத்து மாலை வேறு இருக்கிறது. இவன்தான் கொல்லி மலைத் தலைவனாகிய ஓரியோ!' என்று சிறிதே அந்தப் பாணன் சிந்தனை செய்தான்.

மற்றவர்களை அழைத்து, "நான் பாடுகிறேன்; நீங்களெல்லாம் இசைக் கருவிகளை வாசியுங்கள்" என்றான். அந்த இடத்தில் ஓர் அரிய பாடலாங்கு நிகழ்ந்தது. யாழை ஒருவன் வாசித்தான். முழவை ஒருவன் அடித்தான். பெரிய குழலை ஒருவன்