பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

எழு பெரு வள்ளல்கள்

டினர். புலவர் நள்ளியின் தம்பியைத் தழுவிக் கொண்டு, நன்றாக இருக்கிருயா தம்பி?" என்று அன்போடு கேட்டார். ஆனால் விச்சிக்கோவின் தம்பியைத் தழுவவில்லை.

இது கண்டு வருந்திய அவன், "புலவரே, நீர் இவரை மட்டும் தழுவிக்கொண்டு என்னைத் தழுவாமல் இருக்கிறீரே! ஏன்?" என்று கேட்டான்.

"இவன் குல முதல்வர்களும் இவன் தமையனும் இவனும் கொடையிற் சிறந்தவர்கள்; பாடும் புலவர்களுக்குப் பரிசில் தருபவர்கள். வீட்டில் ஆடவர் இல்லையானுலும் பெண்கள் பெண் யானைகளை அலங்காரம் செய்து வழங்குவார்கள்; அவர் இல்லை; பிறகு வாருங்கள்" என்று சொல்வதில்லை. அந்தக் குலத்தில் பிறந்தவனாதலின் இவனைத் தழுவினேன். நீயோ நன்னன் வழி வந்தவன். புலவர் வேண்டுகோளைப் புறக்கணித்து முறையின்றிப் பெண்ணைக் கொன்று பழி பூண்டவன் அவன். பாடும் புலவர்கள் வந்தால் உங்கள் வீட்டுக் கதவு மூடியிருக்கும். இந்தக் காரணங்களால் புலவர் கூட்டமே உங்களைப் பாடுவதை விட்டு விட்டது'"என்று விடை கூறினார் புலவர்.

அந்தக் குமரன் என்ன செய்வான் பாவம்! முகம் கவிழ்ந்தான்.

இவ்வாறு வழி வழி வந்த வள்ளன்மையில்லை விளக்கமுற்றவன் நள்ளி; தன் பெயர் வெளியில் தெரியாமல் உதவி புரிபவன்; வல்வில் வீரன். எழு பெரு வள்ளல்களில் ஒருவகை அவனை இன்றும் தமிழுலகம் பாராட்டி இன்புறுகிறது.