உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 சியல் சம்பந்தமாகவும் பிற விஷயங்கள் சம்பந்தமாகவும் தமது கிராமத்து மக்களிடம் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். பல நூதன விஷயங்களைப்பற்றி அவர் அடுக்காகவும் ஒழுங்காகவும் பிரசங்கம் செய்ததைக் கேட்ட மக்கள் அவரிடம் அன்பும் மதிப்பும் கொண்- டார்கள். அவர் உள்ளதை உள்ளவாறு பேசக் கேட்ட மக்கள் அவரை உண்மைக்கு உறைவிடமாக மதித்- தார்கள். ஓய்வு நேரங்களில் லிங்கன் ஓஹியோ நதியில் படகைச் செலுத்தி வந்தார். கெண்டகிப் பிர தேசத்திலிருந்து இண்டியானாப் பிரதேசத்துக்கு வர ஒஹியோ நதியைக் கடக்க வேண்டும். அங்ஙனம் வந்த மக்களை லிங்கன் தம் படகில் ஏற்றிக் கரைக்குக் கொண்டு வந்து விடுத்தார். அங்ஙனம் படகிற் பிர - யாணம் செய்த மக்கள் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் கண்டு லிங்கன் பல விஷயங்களை அறிந்து- கொண்டார். அவர்களில் பலர் பட்டணங்களில் இருந்த கச்சேரிகளில் வேலை செய்துவந்த உத்தியோகஸ்தராக இருந்தனர். அவர்களோடு லிங்கன் நன்கு பழகினார்; அவர்கள் வேலை செய்துவந்த பட்டணங்களைத் தாமும் ரைவிற் சென்று காணத் தீர்மானித்தார். மாரிக் காலத்தில் ஓஹியோ நதியில் படகைச் செலுத்தல் இயலாது. அக்காலத்தில் லிங்கன் தமது வீட்டில் இருந்துகொண்டு பல புதிய நூல்களை வாசித்- தார்; நூதன விஷயங்கள் பலவற்றை அறிந்தார் ; ஓய்வு நேரங்களில் விறகு வெட்டினார்; வீட்டுக்கு வேண்டிய ய