உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 களைச் செய்து, அவர்கள் வீட்டிலேயே உண்டு வந்தார்; அவர்கள் கொடுத்த எளிய உடைகளை உடுத்து வந்தார். அக்கேவல நிலையிலும் அவர் புத்தகங்களைப் படிக்கத் தவறினதில்லை; கையிற் கிடைத்த எந்தப் புத்தகத் தையும் படித்து வந்தார். ஒருவன் இரண்டு மணி நேரத்திற் செய்து முடிக்கும் வேலையை அவர் ஒரு மணியில் முடித்துவிட்டு, எஞ்சிய ஒரு மணி நேரத்- தைப் புத்தகம் வாசிப்பதில் கழித்து வந்தார். அவர் வெளியில் வேலை செய்யச் செல்லும்போது, ஒரு புத்த- கத்தைத் தம் சட்டைப் பையில் எடுத்துச் சென்று, ஓய்வு நேரத்தில் ஒரு மரத்தடியிற் படுத்துப் படிப்- பார். இவ்வாறு அவர் தினந்தோறும் செய்து வந்தார். இங்ஙனம் அவர் படித்த நூல்களிற் பெரும்பாலானவை சட்ட நூல்களே. அவர் சிறு வயது முதற்கொண்டே, சட்ட ஞானம் பெற்று வக்கீலாக வேண்டுமென அவாக் கொண்டிருந்தார். சில மாதங்கட்குப் பின்னர் லிங்கன் நியூ சாலெம் கிராமத்தின் தபால் உத்தியோகஸ்தராக (Post Mas- ter) நியமிக்கப்பட்டார். அவ்வேலையில் லிங்கன் நற்- பெயர் பெற்றார். அவர் அவ்வேலையில் மிகுந்த ஓய்- வைப் பெற்றுப் பல புதிய நூல்களையும் வீரர்களின் வரலாறுகளையும் படித்து வந்தார். அந் நிலையில் அங்கு. நிலமளப்பவர் (Surveyor) ஒருவர் வந்தார். அவர் லிங்கன் நண்பரானார். லிங்கன் அவரோடு சேர்ந்து நிலமளக்கவும், நிலத்தின் பரப்பை (area)க் கணக்கிட- வும், நிலத்தைப் பற்றிய வேறு பல விஷயங்களையும்