________________
எப்ரஹாம் லிங்கன் 1. 'அடிமைத் தளையினை அகற்றுவேன்!' ஆ! என்ன கொடுமை! மனிதனை மனிதன் விற்பதா! ஆண்டவர் படைப்பில் அனை- வரும் சகோதரர் என்பதன்றோ உண்மை! அங்ஙனம் இருப்ப, இவ்வெள்ளையர் நீக்ரோவரை அடிமைப்- படுத்துதல் அடாத செயல் அன்றோ! போதாக் குறைக்கு இவர் அவர்களை இவ்வாறு வீதிகளில் கொணர்ந்து நிறுத்தி விலை கூறுதல், அம்மம்ம! கொடுமையினும் கொடுமை அன்றோ! இக்கொடிய செயலை இவ்வமெரிக்க அரசாங்கம் எவ்வாறு ஆத ரித்து வருகின்றது? ஆற்றிவினைப் படைத்த நம் போன்ற மனிதரை நாம் அடிமைப்படுத்தி விற்பதா! எல்லாம் வல்ல இறைவரே, உமது துணைக்கொண்டு எனது ஆயுட் காலத்துள் இக்கொடிய செயலை - இவ்- வடிமைத் தளையை- அடிமை வியாபாரத்தை -அடி- யோடு அகற்றுவேன்!" என்று, ஒரு நாள் அமெரிக்கா- வில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் அடிமை வியாபாரம் நடை பெற்றதைக் கண்ட இளைஞன் ஒருவன் கண்ணீர் விட்டுக் கதறினான்.