உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விராட பர்வ ஏற்றப் பாட்டு

27

துரோணறாம் இளைத்தார்; துரியோதனன் கண்டான்
எழுபதியால் ஒண்ணு இனியவர் எடுப்பர்;
தளராத சேனையெல்லாம் தக்கஅசுவத் தாமா
மிக்கபோர் விளைத்தான்; நக்கனரு ளாளன்
அர்ஜுனன்வில் நாரி அற்றுவிழ எய்தான்;
வெற்றிவந்த தென்றான்; வேங்தனும் மகிழ்ந்தான்;
எண்பதியால் ஒண்ணு. ஏறும்தேர் விஜயன்
இதற்குத்தோற்க மாட்டான் என்றுமனம் எண்ணிச்
சுந்தரமாம் வில்லு, தந்ததொரு பாணம்
அந்தஅம்பை எடுத்து அன்னவனைச் சாடித்
தோற்கடிப்போம் என்று தோற்காத விஜயன்
நாரிஒண்ணு பூட்டி நாலுபாணம் விட்டான்;
தேர்கள்பொடி யாச்சு; செகத்தோர் மகிழ்ந்தார்;
அர்ஜுனனும் அப்போ சிறுவனை எதிர்த்தான்,
கீர்த்தியே மிகுந்தான் [கண்டவர்கள் போற்ற,]
பிள்ளையாரே வாரீர், பேருள்ள பெரியோன்
தீதுகளைத் தீர்த்தான்; வீஷ்மரை எதிர்த்தான்;
தாஷ்டிக முடனே தனஞ்செயனும் அப்போ
அனந்தம்அம்பு விட்டான்; அத்தனையும் வீழ
உத்தமன் உரைத்தான்; ஒருபதியால் ஒண் ணு.

ச்சலிலாப் பாணம் பாச்சினான் கிழவன்;
பார்த்தனும் அலுத்தான்; தீர்த்தன்மேல் அம்பு
தேர்விஜயன் விட்டான்; [விட்ட அந்தப் போதில்]
சாரதி மடிஞ்சு சலித்தவன் இருந்தான்;
கெலித்தபடை எல்லாம் கேலிக்குநிக ராச்சே!
இருபதியால் ஒண்ணு.

டுப்பாய்ஓட்ட மென்பார்; நடுக்கம்மெத்த ஆனார்;
ராஜகூட்ட மெல்லாம் யோசனையில் வீழ்ந்தார்;
ஓங்குவில் விஜயன் மோகனக்கணை யாலே
மூர்ச்சையாகச் செய்தான்; ஆச்சரிய மாக
அனைவரும் விழுந்தார்; முப்பதியால் ஒண்ணு.