34
அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு
காசிதீர்த்தம் கண்டான், ஸ்நானங்களைச் செய்தான்.
தலங்களைப் பார்த்தான். [தாழ்ந்து வணங்கினான்.]
இடங்தனில் கருடன் எதிர்வரக் கண்டான்.
நரையான்வல மாக நன்மையாச்சு தென்றான்.
ஒருபதியால் ஒண்ணு.
உலகம்ஆளும் அரசன் உத்தமியும் கூடச்
சத்திய கீர்த்தியும் புத்திரனும் கூட
வீசுமாங் கனியும் முல்லைஇரு வாட்சி
அன்னங்கள் மயில்கள் ஆடும்பூங் காவனம்
காசிவிசுவ நாதர் பாதமே கண்டான்.
இருபதியால் ஒண்ணு.
ஈசுவரனார் மகனே, விக்கினரே, தண்டம்;
நந்திகேசு வரனே, விசுவநாதரே சரணம்.
சத்தியந்தப் பாமல் தவமுனி ருணத்தை
நீ, வெற்றியாய் அளிப்பாய்; விச்வநாதரே, தொழுதேன்.
முப்பதியால் ஒண்ணு.
முடிபொறுத்த மன்னன் அடியேனைத் தொழுதால்
அல்லல்விட்டு நீயும் அரசாள்வாய் பின்பு.
அவர், வாக்குக்கேட்டு வீதி அலங்காரம் பார்த்துக்
காசிப்பட்ட ணத்தில்—உன்—பொண்சாதியை வித்து
நீ, பொன்னைத்தரு வாயே. காற்பதியால் ஒண்ணு.
நாடுநகர் தோத்து நட்சத்திரன் கையில்
அடிபட்டுகான் நொந்தேன்; காசிஈசு வரனே,
இந்த—வீதிதனில் பெண்டை வித்துத்தர வேணும்.
அன்னைநான் இருக்க என்னைநீரும் வித்து
அந்தரிஷி ருணத்தைத் தீரும். ஐம்பதியால் ஒண்ணு
அன்னைசந்திர மதியைக் கொள்ளுவாரும் உண்டோ?
அக்கினி பகவான் அந்தணரைப் போலே
வந்தடிமை கொண்டான். ஏந்திழையாள் பாலன்
மாங்குயிலைப் போலே மறையவன்பின் போனார்.
அறுபதியால் ஒண்ணு.