ஏற்றப் பாட்டு
41
இலங்கைரா வணனை ஏதுவதை செய்தார்?
இலங்கையைக் கொளுத்தித் திரும்பினார் அயோத்தி.
இருபதியால் ஒண்ணு, இருபதியால் ரெண்டு,
இருபதியால் மூணு, இருபதியால் நாலு.
இடியும்பெருங் காத்தும் மழையும்வரக் கண்டேன்;
இருபதியா லாறு, இருபதியா லேழு,
இருபதியா லேழு, இருபதியா லெட்டு.
இந்திரன் சபைக்குப் பஞ்சவர் நடந்தார்;
முருகருக்கே வள்ளி மோகனப்பொண் ஆனாள்;
கந்தருக்கே வள்ளி கல்யாணப்பொண் ஆனாள்;
முருகர்சந்நி திக்கே வருவார்லட்சம் கோடி;
முப்பதியால் ஒண்ணு, முப்பதியால் ரெண்டு,
முப்பதியால் மூணு, முப்பதியால் நாலு.
முறுக்குச்சுட்ட எண்ணெய், கரிக்குதடா கண்ணை;
முப்பதியா லாறு, முப்பதியால் ஏழு;
முப்பதியா லேழு, முப்பதியால் எட்டு;
மோகபாணம் விட்டார்; மூலபலம் எல்லாம்
மூலபலம் சண்டை முடியும்ராமர் கையால்
நாரதர் பொறந்தார், பாரதம் நடக்க.
நாங்கநாலு பேரும் நாரதர்க் கடிமை;
நாற்பதியால் ஒண்ணு, நாற்பதியால் ரெண்டு,
நாற்பதியால் மூணு, நாற்பதியால் நாலு.
நாககன்னி தேரை நடத்தும்லட்சு மணனே,
நாற்பதியா லாறு, நாற்பதியா லேழு,
நாற்பதியா லேழு, நாற்பதியா லெட்டு;
நந்தன்போனான் காணும், நடேசர்பாதம் காண;
நந்தனுக்கு மோட்சம் தந்தாரே நடேசர்.
அம்பிலே சமர்த்தன், அருச்சுனன் ஒருவன்;
அம்பெடுத்துப் பூட்டி அனுப்பினார் படைக்கு,
ஐம்பதியால் ஒண்ணு ..... ஐம்பதியா லாறு.
அலைகடலில் மாயன் அமிர்தம்கடைஞ் சாரே,
ஐம்பதியால் ஆறு, ஐம்பதியால் ஏழு,
ஐம்பதியால் ஏழு, ஐம்பதியால் எட்டு.