உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீராமர் ஏற்றப் பாட்டு

55

ஸ்ரீராமருந்தான் கேட்டுத் தம்பி லக்ஷ்மணா நீபோய்
இந்த்ரஜித்த னுடைய தலைதனைக் கொண்டுவா;
மயான பூமியர்க்கு எமவாதனை செய்து
இந்த்ரஜித்தன் தோற்று (எவரும் அறியாமல்)
இலங்கைவந்து சேர்ந்து இராவணனைக் கண்டு,
இனியென்னால் சண்டை செய்யஆகா தையா என்றான்
இன்னம்போனால் நானும் இங்குவர மாட்டேன்;
இராவணனும் சீற இங்த்ரஜித்தன் எழுந்து
சாவேனென்று சொல்லி ரணகளமே வந்தான்,
தலையதனை அறுத்து ராமர்பாதம் வைத்தார்;
லக்ஷ்மணர்அம் பாலே எமனுலகைச் சேர்ந்து
நாசமான சேதி ராவணன் அறியான்;
சீதையாள்முன் போலச் சேரும்நாளைக் கொன்றான்,
மங்கைதந்தை யோடே மாயத்தால் ஜனகன்
சீதையர்முன் னாலே தான்வர விடுக்க
அந்தச்சம யத்தில் இந்த்ரஜித் இறந்த
சேதிதனைக் கேட்டு ரணகளமே வந்து
பத்துவா யாலும் கத்தியே அழுதான்;
மூலடலந்தன்னை முடுக்கியே விடுக்க
ஸ்ரீராமருட போரில் ராவணனும் விட்டான்;
வானரங்கள் எல்லாம் பயந்துமேதான் ஓட
ஸ்ரீராமர் தாமும் சேனையை நிறுத்தித்
தாம்ஒருவ ராகப் புன்சிரிப்புக் கொண்டு
மூலபலந் தன்னை ஒருவராய் வளைந்து
கோதண்டம்கைக் கொண்டு நாணியை இழுத்து
ராமபாணம் விடவே ஒருமுகூர்த்தம் தன்னில்
கால்போனவர் சிலபேர்; கைபோனவர் சிலபேர்;
முண்டமானார் சிலபேர்; முண்டங்கள் எடுத்து
மோதுவார் சிலபேர்; வெட்டவெளி யாக்கிக்
காளிகூளி தின்னக் கழுகுகளும் கொத்த
ரத்தவெள்ள மாக்கி மோகனாஸ் திரத்தை
ராமரும் விடுத்து எங்கும்ராமர் ஆகி
அவருக்கு அவரே சாகவேதான் செய்தார்;